அஜித்தின் ’தல’ பட்டம்... ஏ.ஆர்.முருகதாஸ் யாரிடமிருந்து சுட்டார் தெரியுமா?

அஜித்திற்கு சூட்டப்பட்ட தல பட்டத்தை உதவி இயக்குநர் ஒருவரிடமிருந்து காப்பியடித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பெயர் வாங்கிக் கொண்டார் என இயக்குநர் ப்ரவீன் காந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
 | 

சர்கார் படக்கதை விவகாரத்தில் இருந்து விடுபட்ட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை மீண்டும் வட்டமடிக்கத் தொடங்கி இருக்கிறது சர்ச்சைகள். இப்போது குற்றச்சாட்டை முன் வைத்திருப்பவர் இயக்குநர் ப்ரவீன் காந்த். இவர் ரட்சகன், ஸ்டார் ஆகிய படங்களை இயக்கியவர். இவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள் தான் ஏ.ஆர் முருகதாஸ், எஸ்.ஜே சூர்யா. அடுத்து அவரே தொடர்கிறார் ’’தினா படம் நான் இயக்க வேண்டிய படம் அதை எஸ்.ஜே சூர்யா மூலமாக ஏ.ஆர்.முருகதாஸ் தட்டிப்பறித்து விட்டார். என்னோட உதவியாளர்தானே என விட்டுக்கொடுத்தேன்.  ரட்சகன் படத்தில் உதவி இயக்குநராக இருந்த மோகன் என்பவர்தான்  தல பட்டத்தை கொடுத்தவர்.

அஜித்தின் ’தல’ பட்டம்... ஏ.ஆர்.முருகதாஸ் யாரிடமிருந்து சுட்டார் தெரியுமா?

செல்வமணியிடம் அசோசியேட்டாக இருந்தவர். தாம்பரத்தை சேர்ந்தவர். அவர் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த தனது கதையில் இருக்கும் கதாபாத்திரத்திற்கு தல எனப்பெயர் வைத்திருந்தார். அதை அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருப்பார். அஜித்தை தல என அழைப்பது தலைமைப் பதவிக்கே அவரை லீட் பண்ணிக் கொண்டு போகிறது. அப்படிப்பட்ட பட்டத்தையும் ஒரு உதவியாளரிடம் இருந்து தான் ஏ.ஆர்.முருகதாஸ் சுட்டிருக்கிறார். அந்த உதவியாளருக்கு ஏ.ஆர்.முருகதாஸ் விசுவாசமாக இருந்திருக்கிறா? ஏன் இதை இப்போது குற்றமாகச் சொல்கிறேன் என்றால் முருகதாஸின் எல்லாப் படங்களுமே தழுவலாகத்தான் இருக்கிறது.

அஜித்தின் ’தல’ பட்டம்... ஏ.ஆர்.முருகதாஸ் யாரிடமிருந்து சுட்டார் தெரியுமா?

அதை இல்லையென்று சொல்லி முருகதாஸ் நழுவ முடியாது. ரமணா படம் நந்தகுமார் என்பவரின் கதை. பிறகு செட்டில்மெண்ட் செய்யப்பட்டு விவகாரம் அடக்கப்பட்டு விட்டது. கஜினி எங்கிருந்து சுடப்பட்டது என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கத்தி படக்கதைக்கும் பிரச்னை வந்தது. அடுத்தடுத்து வந்த படங்களும் பிரச்னை வந்தது. இப்படி உதவியாளர்களின் கதைகளை காப்பியடித்து அவர்களை தவிக்க விட்டு வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்’ என அவரது குருநாதரான இயக்குநர் ப்ரவீன் காந்த் குற்றம்சாட்டியுள்ளார். 

அஜித்தின் ’தல’ பட்டம்... ஏ.ஆர்.முருகதாஸ் யாரிடமிருந்து சுட்டார் தெரியுமா?

இந்நிலையில், சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஏ.ஆர்.முருகதாஸ் மீது கடும் கோபத்தில் இருக்கிறது. சர்கார் படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ், அடுத்து ரஜினி நடித்த பேட்ட படத்தையும் தயாரித்துள்ளது. இதனையடுத்து ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கிறார். இந்தப்படத்தையும் சன்பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், சன்பிக்சர்ஸ் பண விஷயங்களில் கெடுபிடி காட்டும் என்பதால் லைகா புரடெக்சனுக்கு கைமாற்றி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதற்காக ரஜினியை சரிக்கட்டி காய் நகர்த்தியவர் முருகதாஸ் என்கிறார்கள். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP