என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்தின் அப்பா-மகள் பாட்டு: வைரலாகும் கண்ணான கண்ணே!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி 8 லட்சம் பார்வையாளர்களை தாண்டி ஹிட் அடித்துள்ளது.
 | 

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 4வது படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களைத் தொடர்ந்து 4வது முறையாக இப்படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். 

மேலும், தம்பி ராமையா, ஜகபதி பாபு, ராஜ்கிரண், போஸ் வெங்கட், கோவை சரளா, மைம் கோபி, ரோபோ சங்கர், விவேக், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ளது. அண்மையில், இப்படத்தின் அடிச்சிதூக்கு, வேட்டிகட்டு மற்றும் தல்லே தில்லாலே ஆகிய பாடல்களின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகி வைரலாது. மேலும், ஒட்டு மொத்த பாடல்களும் வெளியானது. 

இந்த நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணாண கண்ணே என்ற பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. தாமரை எழுதிய இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித்தின் அப்பா-மகள் பாடலாக இது அமைந்திருக்கிறது. தற்போது 8 லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP