‘சாமி 2’ படத்தில் விக்ரம் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்!

‘சாமி 2’ படத்தில் விக்ரம் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்!
 | 

‘சாமி 2’ படத்தில் விக்ரம் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்!

‘சாமி 2’ படத்தில் விக்ரமின் இன்னொரு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் வந்திருக்கிறார். 

’நான் போலீஸ் இல்ல.., பொறுக்கி..!’ என பீர் பாட்டிலில் முகம் கழுவியபடி அறிமுக காட்சியிலேயே அதகளம் பண்ணும் ஆறுச்சாமியாக விக்ரம் வெளுத்து வாங்கிய ’சாமி’ படத்தை யாரும் அவ்வளவு லேசில் மறக்க முடியாது! 15 வருடங்களுக்கு முன் ரிலீஸ் ஆன இந்தப் படம் தமிழ் சினிமாவின் கிளாசிகல் மூவியாக இடம் பிடித்திருக்கிறது. 
’சாமி’ படத்தின் நாயகன் விக்ரம், இயக்குநர் ஹரி மீண்டும் கூட்டணி போட்டு இதன் இரண்டாம் பாகமாக ’சாமி 2’ படத்தை உருவாக்கி வருகின்றனர். இதில், அப்பா -மகன் என இருவேடங்களில் வந்து பின்னி பெடலெடுக்கப் போகிறார் விக்ரம்! 

‘சாமி 2’ படத்தில் விக்ரம் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்!

இந்தப் படத்தில் இரட்டை வேடம் ஏற்றுள்ள விக்ரமின் ஒரு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இருக்கிறார்.’சாமி’யில் மாமியாக வந்த த்ரிஷா தான் இன்னொரு ஜோடியாக நடிப்பதாக இருந்தது! ஆனால், இதில் கீர்த்தி சுரேஷ் இருப்பதால், தனது கதாப்பாத்திரத்துக்கு இம்பார்டென்ஸ் இருக்காது என கருதி, கடைசி நேரத்தில் ஒதுங்கிக் கொண்டார் த்ரிஷா.         

’சாமி 2’ படத்தின் முக்கால் வாசி ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இந்தப் படத்தில் த்ரிஷா இடத்தில், ஐஸ்வர்யா ராஜேஷை கொண்டு வந்திருக்கிறார்கள்.விக்ரமின் இன்னொரு ஜோடியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, பிரபு, விவேக், சூரி, ஜான் விஜய், உமா ரியாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP