ஜி.வி.பிரகாஷை வாழ்த்திய ஐஸ்வர்யா ராய்!

சர்வம் தாள மயம் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிளை நடிகை ஐஸ்வர்யா ராய் ரிலீஸ் செய்து, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இந்தத் திரைப்படத்தை ராஜிவ் மேனன் இயக்கியிருக்கிறார்
 | 

ஜி.வி.பிரகாஷை வாழ்த்திய ஐஸ்வர்யா ராய்!

நடிகர் ஜி.வி.பிரகாஷின் 'சர்வம் தாள மயம்' திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகியிருக்கிறது. இதனை நடிகை ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ளார். சர்வம் தாள மயம் படத்தை இயக்கியிருக்கும் ராஜிவ் மேனனின், கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், திரைப்படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ். 

சர்வம் தாள மயம் படத்தைப் பற்றி அவர் பாடியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், "டைனமிக் ஜோடியான ராஜிவ் மேனன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் 'கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்' திரைப்படத்திற்குப் பிறகு, 'சர்வம் தாள மயம்' படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இசையின் ரிதம், ஜீவன் ஆகியவற்றை கொண்டாடும் படமாக இது அமைந்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் 'மாயா மாயா மன்மோகனா' என்ற பாடலை வெளியிடுவதில், மிகுந்த பெருமைக் கொள்கிறேன். அனைவரும் இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள். சர்வம் தாள மயம் படத்திற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! காட் ப்ளஸ்" எனத் தெரிவித்திருக்கிறார். 

முழுக்க முழுக்க இசையை மையப்படுத்தி 'மியூஸிக்கல் ஃபிலிமாக' எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை, ராஜிவ் மேனனின் மைண்ட்ஸ்கிரீன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP