போதையில் தயாரிப்பாளரைத் தாக்கிய நடிகை!

என் அம்மாவை திட்டினார்.. போதையில் பீர் பாட்டிலால் நான் தாக்குனேனா? : நடிகை விளக்கம்
 | 

போதையில் தயாரிப்பாளரைத் தாக்கிய நடிகை!

தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடத்தி பிரபலமாகி வருகிறார் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் நடிகை நிக்கி கல்ராணியின் மூத்த சகோதரி ஆவார். சஞ்சனா தற்போது போடா முண்டம் தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் திரையுலகிற்கு பிரபலம் இல்லையென்றாலும் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது அவரது இயல்பு.

போதையில் தயாரிப்பாளரைத் தாக்கிய நடிகை!

இந்நிலையில் நடிகை சஞ்சனா மீது பெண் தயாரிப்பாளர் வந்தனா ஜெயின் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள கப்பன் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெங்களூரில் நடந்த பார்ட்டி ஒன்றில் சஞ்சனாவும் கலந்து கொண்டதாகவும் அப்போது போதையில் மதுப்பாட்டிலால் தாக்கியதாகவும் கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை நடிகை சஞ்சனா மறுத்துள்ளார். பார்ட்டியில் வந்தனாவுடன் பிரச்சனை ஏற்பட்டது உண்மை தான். ஆனால் நான் அவரை பீர் பாட்டிலால் தாக்கவில்லை என கூறுகிறார்.

போதையில் தயாரிப்பாளரைத் தாக்கிய நடிகை!

நான் தாக்கியதாக கூறும் அந்த பெண்ணிடம் எந்த ஆதாரமும் இல்லை. அவர் என் அம்மா, குடும்பத்தாரை கெட்ட வார்த்தைகளால் திட்டினார். என் கெரியரை நாசமாக்கி, என் பெயரை கெடுத்து, என் குடும்பத்தாரை காலி செய்து, என்னை சிறையில் தள்ளுவதாக அவர்தான் மிரட்டினார் எனவும் விளக்கம் அளித்தார். என் செல்போனை பறித்துக் கொண்டு, என் கையை பிடித்து அவர் முறுக்கிய வீடியோ தான் சான்று. அந்த வீடியோவில் அவர் முகத்தில் ஏதாவது காயம் உள்ளதா?. பாட்டில் உடைக்கப்பட்டால் காயமோ, ரத்தமோ இருக்கும். அது போன்று பொறுப்பில்லாமல் நான் நடந்து கொள்ள மாட்டேன். இது என் பெயரை கெடுக்கும் சதி என்று சஞ்சனா தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP