நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்

நடிகரும், அரசியல்வாதியுமான நடிகர் ராதாரவி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
 | 

 நடிகர் ராதாரவி பாஜகவில்  இணைந்தார்

நடிகரும், அரசியல்வாதியுமான நடிகர் ராதாரவி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

மறைந்த மூத்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகனும், அரசியல்வாதியும் ஆனவர் நடிகர் ராதாராவி. இவர், சினிமா திரைப்படங்களில் நடித்துக் கொண்டும், அரசியல் கட்சிகளில் பிரபல பேச்சாளாராகவும் செயல்பட்டு வருகிறார். முதன்முதலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் திமுகவில் இணைந்தார். அதன்பிறகு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி செய்த வந்த காலத்தில் அதிமுகவில் இணைந்து, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

ஒரு திரைப்பட விழாவில், நடிகை நயன்தாரா குறித்து தவறாக பேசியதாக, திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதையடுத்து, திமுகவில் இருந்து தாமாக வந்து ராதாரவியே விலகி கொள்வதாக அறிவித்தார். அதன்பிறகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சமீபத்தில் அதிமுக மீண்டும் தன்னை இணைத்துகொண்டார்.

இந்த நிலையில், சென்னையில் பாஜக செயல்தலைவர் ஜே.பி. நட்டா  முன்னிலையில் நடிகர் ராதாரவி பாஜகவில் இன்று இனைந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்திருந்த ஜே.பி. நட்டா  முன்னிலையில் கட்சியில் தன்னை இணைந்துக்கொண்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP