கேங் லீடராக மாறியுள்ளார் நடிகர் நானி 

'கேங் லீடர்’ படம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் நானி: நாங்கள் சந்தித்தோம், நாங்கள் தயார், நாங்கள் தான் கேங், நான் தான் கேங் லீடர் என பதிவிட்டுள்ளார்.
 | 

கேங் லீடராக மாறியுள்ளார் நடிகர் நானி 

’ஈ’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகர் நானி, ஜெர்சி படத்தைத் தொடர்ந்து 'கேங் லீடர்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். அதோடு ஜெர்சி படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், நானியின் கேங் லீடர் படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், விக்ரம் கே குமார் இயக்கும்  இந்த படம் குறித்த  எந்த தகவலும் வெளிவராத நிலையில், தற்போது வரும் ஜூலை 15ம் தேதி பர்ஸ்ட் லுக் போஸ்டரும், ஜூலை 18ம் தேதி இதன் முதல் பாடலும், ஜூலை 24ம் தேதி டீசரும் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் இந்த படம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் நானி: நாங்கள் சந்தித்தோம், நாங்கள் தயார், நாங்கள் தான் கேங், நான் தான் கேங் லீடர் என பதிவிட்டுள்ளார்.

 

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP