நடிகர் மோகனின் ஓட்டை யாரோ போட்டதால் பரபரப்பு!

நடிகர் சங்க தேர்தலில் நடிகர் மோகனின் ஓட்டை யாரோ போட்டுவிட்டதால் பரபரப்பு நிலவியது.
 | 

நடிகர் மோகனின் ஓட்டை யாரோ போட்டதால் பரபரப்பு!

நடிகர் சங்க தேர்தலில் நடிகர் மோகனின் ஓட்டை யாரோ போட்டுவிட்டதால் பரபரப்பு நிலவியது. 

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூர் நடைபெற்று வருகிறது. இதில் விஜய், ஆர்யா, விவேக், நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் உள்ளிட்டோர் வாக்களித்துள்ளனர். நண்பகல் 12 மணி நிலவரப்படி 946 நடிகை, நடிகைகள் வாக்களித்தனர். இந்நிலையில், நடிகர் மோகன் வாக்களிக்க வந்தபோது, அவரது ஓட்டை யாரோ போட்டிருப்பது தெரியவந்தது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

இதையடுத்து, மோகன் வாக்களிக்கவில்லை என்பதால் நடிகர் மோகனின் வாக்கு பதிவுச்சீட்டை தேர்தல் அதிகாரி பெற்று கொண்டார். ஒரே பெயருடையே யாரேனும் மாற்றி போட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த நடிகர் சங்க தேர்தலிலும் நடிகர் மோகனின் ஓட்டை வேறு யாரோ போட்டது குறிப்பிட்டத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP