ரசிகரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத நடிகர் கார்த்தி 

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் உடலை பார்த்து நடிகர் கார்த்தி கண்ணீர்விட்டு அழுதார்.
 | 

ரசிகரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத நடிகர் கார்த்தி 

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் உடலை பார்த்து நடிகர் கார்த்தி கண்ணீர்விட்டு அழுதார்.

கார்த்தி மக்கள் நல மன்றத்தில் சென்னை மாவட்ட அமைப்பாளர் வியாசை நித்தியா நேற்று இரவும் உளூந்தூர் பேட்டையில் நிகழந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள  ‘தம்பி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக கார்த்தி மக்கள் நல மன்றத்தின் சென்னை மாவட்ட அமைப்பாளர் வியாசை நித்தியா சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

உடனே, இந்த விபத்து குறித்து தகவலறிந்த கார்த்தி,  இன்று அதிகாலை வியாசை நித்தியா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரின் உடலை பார்த்து கார்த்தி கண்ணீர் விட்டு அழுதார். அத்துடன், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.

ரசிகரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத நடிகர் கார்த்தி 

இதனைத்தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற ‘தம்பி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரசிகர் உயிரிழந்ததற்காக, விழா துவங்கும் முன்பு அனைவரையும் ஒரு நிமிடம் அமைதியாக எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்த கார்த்தி கேட்டுக்கொண்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP