தனுஷ்கோடிக்கு வந்த ஆமிர்கான்! இளைஞர்களுக்கு அட்வைஸ்!

"வாழ்க்கை என்பது ஒரு முறை தான்.." தமிழக இளைஞர்களுக்காக அமீர்கான் உருக்கம்
 | 

தனுஷ்கோடிக்கு வந்த ஆமிர்கான்! இளைஞர்களுக்கு அட்வைஸ்!

பிரபல பாலிவுட் நடிகரான அமீர்கான் , படப்பிடிப்பு தொடர்பாக ராமேஸ்வரம் அருகேயுள்ள தனுஷ்கோடிக்கு வந்திருந்தார். அவரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் சந்தித்து பேசினார். அப்போது, ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

தனுஷ்கோடிக்கு வந்த ஆமிர்கான்! இளைஞர்களுக்கு அட்வைஸ்!அப்போது ஆங்கிலத்தில் பேசிய அமீர்கான், இளைஞர்கள் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் பேசிய அவர், இளைஞர்களுக்கு என் அன்பான வேண்டுகோள் என்னவென்றால் இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து தள்ளியே இருங்கள். போதை மற்றும் குடிப்பழக்கம் உங்களது வாழ்கைக்கு பேராபத்து. நாம் வாழ்வது ஒரு முறை தான். அந்த வாழ்கையை நாம் ரசித்து சந்தோஷத்துடன் வாழ வேண்டும். அதே போல் நமது உடலை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி எனில் போதை பொருள்களை பயன்படுத்தாமல் முற்றிலும் அதை விட்டு தூரமாக இருக்க வேண்டும் என அமீர்கான் கேட்டுக்கொண்டார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP