ராஜமௌலி படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் ஆலியா பட்!

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் மெகா பட்ஜெட் திரைப்படமான ஆர்ஆர்ஆர்-இல் பாலிவுட் நடிகை அலியா பட் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

ராஜமௌலி படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் ஆலியா பட்!

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் மெகா பட்ஜெட் திரைப்படமான ஆர்ஆர்ஆர்-ல் பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகளவில் கவனம் பெற்றஇயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியின் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு அவரது அடுத்த திரைப்படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.  அந்த நேரத்தில் தான் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆரை வைத்து படம் இயக்கப்போவதாக என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று படம் குறித்து ராஜமௌலி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த திரைப்படத்தை முன்பாக ஆர்ஆர்ஆர் என்று அழைத்து வந்தனர். 

 

 

இந்நிலையில் இந்த படத்திற்கு அதையே டைட்டிலாக வைத்திருப்பதாக ராஜமௌலி அறிவித்துள்ளார். மேலும் இது சுதந்திரதுக்கு முன் நடந்த இரண்டு நிஜ ஹீரோக்களை பற்றிய கதை, 2 வருடங்களாக படத்திற்காக நிறைய ஆராய்ச்சி நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார். 

இத்திரைப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், ஹாலிவுட் நடிகை டைசி எட்ஜர் ஜோன்ஸ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் தயாராகும் இப்படம் ரூ. 400 பட்ஜெட்டில் உருவாகிறது.

இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP