A1  திரைப்படத்தின் தர லோக்கல் டீசர் உள்ளே..!

A1 படத்தின் டீஷர் இன்று வெளியிடப்பட்டது. தர லோக்கல் வசனங்களுடனும், சென்னைக்கே உரித்தான கானாவுடனும் உருவாக்கப்பட்டுள்ளது இந்த டீசர். மேலும், ஆச்சாரமான வீட்டு பெண்ணை, பீச்சோரமாக வசிக்கும் நாயகன் காதலிப்பதே, A1 படத்தின் கதையாக இருக்கும், என இந்த டீசரின் மூலம் தெரிகிறது.
 | 

A1  திரைப்படத்தின் தர லோக்கல் டீசர் உள்ளே..!

நகைச்சுவை நடிகராக இருந்து கதாநயகனாக தன்னை உயர்த்தி கொண்டவர் நடிகர் சந்தானம்.  இவரின் தில்லுக்கு துட்டு 2 படம் காமெடி கலந்த ஹாரர் படமாக அமைந்து பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்றது. 

இதனையடுத்து, ஜான்சன் இயக்கத்தில், சந்தானம் A1 படத்தின் நாயகனாக நடித்து வருகிறார். மேலும், தாரா அலிஷா பெர்ரி, மொட்ட ராஜேந்திரன், மனோகர், சுவாமிநாதன்,சாய்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை ராஜ்நாரயனன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு, கோபி ஜகதேஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த மாதம், A1 படத்தின் முதல் பார்வை போஸ்டர்  வெளியிடப்பட்டது.  அதனை தொடர்ந்து, A1 படத்தின்  டீஷர்  இன்று வெளியிடப்பட்டது. தர லோக்கல் வசனங்களுடனும், சென்னைக்கே உரித்தான கானாவுடனும் உருவாக்கப்பட்டுள்ளது இந்த  டீசர் . மேலும், ஆச்சாரமான வீட்டு பெண்ணை, பீச்சோரமாக வசிக்கும் நாயகன், காதலிப்பதே இந்த படத்தின் கதையாக இருக்கும், என இந்த  டீசரின் மூலம் தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP