நடிகர் சங்க தேர்தலில் 68 பேர் போட்டி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மொத்தம் 68 பேர் போட்டியிடுகின்றனர்.
 | 

நடிகர் சங்க தேர்தலில் 68 பேர் போட்டி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மொத்தம் 68 பேர் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவிக்கு பாண்டவர் அணி சார்பில் நாசர், சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகின்றனர். 

துணை தலைவர் பதவிக்கு கருணாஸ், குட்டி பத்மினி, பூச்சி முருகன், உதயா ஆகியோரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், ஐசரி கணேஷ் ஆகியோரும், நடிகர் சங்க பொருளாளர் பதவிக்கு கார்த்தி, பிரஷாந்த் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு இரு அணிகள் தரப்பு, சுயேச்சைகள் என மொத்தம் 58 பேர் போட்டியிடுகின்றனர்.  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP