பேட்ட 50வது நாள் கொண்டாட்டம்: மருமகன்களுடன் கேக் வெட்டிய ரஜினி

சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் 50 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இதற்கான கொண்டாட்டத்தில் ரஜினியின் மருமகன்களான தனுஷ் மற்றும் விசாகன் கலந்துக்கொண்டனர்.
 | 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம்  இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தனர்.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. 50 நாட்களை கடந்து இந்த திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில் சிறப்பு பார்ட்டி வைக்கப்பட்டது. 

சன் பிக்சர்ஸ் சார்பில் வைக்கப்பட்ட இந்த பார்ட்டில் ரஜினி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். குறிப்பாக ரஜினியின் மருமகன்கான தனுஷ் மற்றும் விசாகன் வணங்காமுடி ஆகியோரும் கலந்து கொண்டனர். 

ரஜினி இந்த பார்ட்டியில் கேக் வெட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP