2.0 வெறித்தனமாக இருக்கிறது: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு

சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் வெறித்தனமாக இருப்பதாக பேட்ட படத்தை இயக்கிக் கொண்டு இருக்கும் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 | 

2.0 வெறித்தனமாக இருக்கிறது: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் வெறித்தனமாக இருப்பதாக பேட்ட படத்தை இயக்கிக் கொண்டு இருக்கும் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 2.0 படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். 

 

 

இந்த படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இந்நிலையில் படத்தை பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், "2.0 வெறித்தனமாக இருக்கிறது. தலைவர் ஸ்கீரினில் வரும் காட்சிகள் அற்புதமாக இருக்கின்றன. இந்திய சினிமாவின் தரத்தை இந்த படம் உயர்த்தி உள்ளது. அனைவரும் கொண்டாட வேண்டிய படம்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP