தம்பி திரைப்படம் ஜெயிக்குமா? தம்பி திரை விமர்சனம்!

தம்பி திரை விமர்சனம்! ஜோ.. கார்த்தி காம்போ வொர்க் அவுட் ஆச்சா?
 | 

தம்பி திரைப்படம்  ஜெயிக்குமா? தம்பி திரை விமர்சனம்!

ஊட்டியில் பெரும் அரசியல் பிரமுகராக இருப்பவர் சத்யராஜ், அவருக்கு மனைவியாக நடிகை சீதா, அம்மாவாக சௌகார் ஜானகி, மகளாக ஜோதிகா என பிரபலங்கள் கூடி குடும்பமாக வாழ்கிறார்கள்.  சத்யராஜின் காணாமல் போன மகன் கார்த்தி, 15 வருஷங்களுக்கு பின்னர் குடும்பத்துடன் இணைகிறார். சத்யராஜுக்கு பெரும் பிரச்சனை வருகிறது. மகன் கார்த்தியை கொல்வதற்காக சதிதிட்டம் நடக்கிறது. ஏன் கார்த்தியைக் கொல்ல நினைக்கிறார்கள்? எதனால் காணாமல் போனார் என்பது தான் தம்பி!

தம்பி திரைப்படம்  ஜெயிக்குமா? தம்பி திரை விமர்சனம்!
இது முழுக்கவே கார்த்தி படம் தான். ஆக்‌ஷன் கலந்த இயல்பான நடிப்பு என்று ஸ்கோர் செய்கிறார்.  கண்டிப்பு, பாசம், ஏக்கம் நிறைந்த அக்காவாக ஜோ அத்தனை பொருத்தம். ஆனால், ரோல் செய்துள்ளார்.  வழக்கமான ஜோ இதில் மிஸ்ஸிங். பெரியளவில் வசனங்களும், ஸ்கோர் செய்யும் வாய்ப்பும் இல்லாமல் பரிதாபமாய் நிற்கிறார். சத்யராஜ் நடிப்பு வழக்கம் போலவே தனித்து தெரிகிறது. பின்னணி இசையில் குறை வைக்காத இசையமைப்பாளர் கோவிந்த் பாடல்களில் கோட்டை விட்டிருக்கிறார். பாடல்கள் எல்லாமே சுமார் ரகம் தான்.

தம்பி திரைப்படம்  ஜெயிக்குமா? தம்பி திரை விமர்சனம்!

படத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி. கதையும் நீலகிரி மாவட்டத்தை சுற்றியே நடைபெறுவதால் ஒவ்வொரு ப்ரேமிலும் அசத்தல் தான். ஆனால், முதல் பாதியில் விறுவிறுப்பை தராத நிறைய காட்சிகள் ரொ...ம்ப நீளம் சாரே..! யோசிக்காமலேயே கத்தரித்திருக்கலாம். படத்தின் பின்பகுதியில் சில நச் காட்சிகள். அதை படம் முழுக்கவே பரபரப்பாக வைத்திருந்தால் ‘தம்பி’ எல்லோராலும் கொண்டாடப்பட்டிருப்பான். இரண்டாம் சீதா, இளவரசு போன்றோரின் கதாபாத்திரங்கள் வீணடிக்கப்பட்டிருக்கிறது.

தம்பி திரைப்படம்  ஜெயிக்குமா? தம்பி திரை விமர்சனம்! 

‘பாபநாசம்’ படத்தை இயக்கியவர் என்று ஜீத்து ஜோசப்பை மனதில் வைத்து படம் பார்க்க ஆவலுடன் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் முணுமுணுத்துக் கொண்டே திரும்பிச் செல்வது தான் படம் சந்தித்த மிகப் பெரிய சறுக்கல். 

தம்பி திரைப்படம்  ஜெயிக்குமா? தம்பி திரை விமர்சனம்!

தம்பி... தரமான பாசத்தைக் காட்ட தவறியவன்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP