’மிஸ்டர் சந்திரமெளலி’ - நியூஸ்டிஎம் திரை விமர்சனம் #MisterChandramouli

’மிஸ்டர் சந்திரமெளலி’ - திரை விமர்சனம்
 | 

’மிஸ்டர் சந்திரமெளலி’ - நியூஸ்டிஎம் திரை விமர்சனம் #MisterChandramouli

வாடகை கார் நிறுவனத்தின் (கேம்ப்ஸ் ஓனர்ஸ்) முதலாளிகளுக்கு நடுவே நடக்கும் தொழில் போட்டியில், அப்பாவி ஒருவர் பலியாக, ஆவேசமாகும் அவரின் மகன் சம்மந்தப்பட்டவர்களை பழி தீர்க்கும் கதை! 

’கருடா கேப்ஸ்’ முதலாளி மகேந்திரனுக்கும், ’ஓகே கேப்ஸ்’ முதலாளி சந்தோஷ் பிரதாப்புக்கும் தொழில் போட்டி! தனக்கு சாதகமான சிலரை ’ஓகே கேப்ஸ்’ கம்பெனிக்கு டிரைவர்களாக அனுப்பி, காரில் பயணம் செய்யும் பொது மக்களை அச்சுறுத்தி வழிப்பறி செய்வது, பெண்களிடம் தகாத முறையில் நடப்பது, நிலமை மீறும்போது கொலை செய்வது... என்பது மாதிரியான அண்டர் கிரவுண்ட் வேலைகள் செய்து சந்தோஷ் நிறுவனத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார் மகேந்திரன்.

அதை சமாளிக்க சந்தோஷ் எடுக்கும் முயற்சியில், கொலை செய்யப்படுகிறார் கார்த்திக்! வாடகை கார் முதலாளிகளுக்கும், கார்த்திக்கிற்கும் என்ன சம்பந்தம்? தந்தையின் சாவுக்கு காரணமானவர்களை மகன் கெளதம் கார்த்திக் எப்படி பழி தீர்க்கிறார் என்பது மீதிக் கதை!           

’மிஸ்டர் சந்திரமெளலி’ - நியூஸ்டிஎம் திரை விமர்சனம் #MisterChandramouli

’ஒருவரின் தொழிலை அழிக்க, இன்னொருவர் செய்யும் சூழ்ச்சியால், அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத அப்பாவி ஒருவர் பலியாகிறார்’ என்கிற மிகவும் ’வீக்’கான கதையை வைத்துக்கு கொண்டு, அந்தக் கதைக்குள் கார்பரேட் கம்பனிகளின் சூழ்ச்சி, அப்பா -மகன் சென்டிமென்ட், சதீஷின் காமெடி துணுக்கு, ரெஜினாவின் கிளாமர்... என ’கமர்ஷியல் பேக்கெஜ்’ ஸ்டைலில் ’திரைக்கதை ரீல்’ சுற்றியிருக்கும் இயக்குநர் திரு, தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் காதில் முழம் கணக்கில் பூ சுற்றுகிறார். ’கேப்ஸ் பயணம், இவ்வளவு திகிலானதா?’ என்கிற அச்சத்தையும் பொது மக்கள் மத்தியில்,ஏற்படுத்துகிறது இந்த திரைப்படம். 

நவரச நாயகன் கார்த்திக், அவரின் மகன் கெளதம் கார்த்திக் இருவரும் அப்பா - மகனாகவே நடித்திருக்கிறார்கள். ஒன்றாக சேர்ந்து ’பார்ட்டி’ பண்ணுவது, ரெஜினாவோடு ’பப்’பில் குத்தாட்டம் போடுவது என அப்பாவும், மகனும் சேர்ந்து அலப்பறை செய்கிறார்கள். வெற்றிலையைக் குதப்பியபடி பேசுவது போன்ற குரல், பிளேபாய் போல எதற்குமே அலட்டிக்காத ஜாலி, மகள் வயதுள்ள வரலட்சுமியுடன் மலரும் மெல்லிய காதல், பழைய மாடல் கார், பட்டன் செல்போன்... சகிதமாக சந்திரமெளலியாக வரும் கார்த்திக்கிடம், பழைய குறும்புத்தனம் மாறவேயில்லை! 

நாயகி ரெஜினாவின் காதலில் விழுவது, காதலியோடு சேர்ந்து ‘டூயட்’ பாடுவது என பிளேபாயாக இருக்கும் கெளதம் கார்த்திக், குத்து சண்டை வீரனாக எடுக்கும் முயற்சியில், அப்பாவின் கொலைக்கு காரணமானவர்களை பழி தீர்க்கத் துடிக்கும் துடிப்பில், ஆக்‌ஷன் ஹீரோவுக்கான ஆவேசத்தைக்  காட்டுகிறார்.          

’மிஸ்டர் சந்திரமெளலி’ - நியூஸ்டிஎம் திரை விமர்சனம் #MisterChandramouli

ஒரு பாடல் காட்சியில் ’டூ பீஸ்’ டிரெஸ்ஸில் தோன்றி, டால்பினைப் போல கடலுக்குள் துள்ளி, ரசிகர்களை பீஸ் பீஸாக்குகிறார் நாயகி ரெஜினா! ’டூயட்’ பாடுவதுடன், காதலனின் லட்சியத்துக்கு உதவும் காதலியாகவும் வலம் வந்து தனது இருப்பைக் காட்டியபடியே இருக்கிறார். கிளாமருக்கு ரெஜினா என்றால், ஹோம்லிக்கு வரலட்சுமி! ஆனால், அப்பா வயதுள்ள கார்த்திக் மீது மோகம் கொள்வதும், காதலை அப்பட்டமாக வெளிப்படுத்திய பிறகு, ’நீங்க என்னோட அப்பா மாதிரியே இருக்கீங்க! அதுக்காகவே அடிக்கடி பாக்கத் தோணுது! ஆனா நான், ஒங்கள அப்பானெல்லாம் நெனசுக்க முடியாது!’ என ’டயலாக்’ பேசியபடியே வரலட்சுமி காதலில் உருகுவது, சகிக்க முடியலடா சாமி!   

’கேப்ஸ்’ முதலாளிகள் மகேந்திரன் - சந்தோஷ் பிரதாப் இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள். அவ்வப்பது ’டயமிங் காமெடி’ செய்து ரிலாக்ஸ் படுத்தும் சதீஷ், போலீஸ் அதிகாரி விஜி சந்திரசேகர், வில்லனின் கை ஆள் ’மைம்’ கோபி ஆகியோரும் இருக்கின்றனர். 

பாடலில் கோட்டை விட்டாலும், பின்னணியில் சாளித்துவிடுகிறார் சாம் சி.எஸ். கேமராவில் தனது கை வண்ணத்தைக் காட்டுகிறார் ரிச்சர்ட் எம்.நாதன்.

’மிஸ்டர் சந்திர மெளலி’ ரேட்டிங் 1.5/5

ரசிகர்கள் கருத்து என்ன தெரியுமா?

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP