ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - திரை விமர்சனம்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - திரை விமர்சனம்
 | 

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் -  திரை விமர்சனம்


விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹாரிகா, காயத்ரி, ரமேஷ் திலக், டேனியல், ராஜ்குமார் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை, 7சி'ஸ் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில், ரமேஷ் காளிமுத்து தயாரித்துள்ளார். 

படத்தை வசனம் எழுதி இயக்கியுள்ளார் புதுமுக இயக்குனர் ஆறுமுக குமார். இசை - ஜஸ்டின் பிரபாகரன்; ஒளிப்பதிவு - ஸ்ரீ சரவணன்.

அட்வென்ச்சர் காமெடி ரகத்தில் படத்தை நமக்கு அளிக்க முயற்சி செய்துள்ளார் ஆறுமுக குமார். 


காட்டில் வாழும் ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவர் விஜய் சேதுபதி. கொள்ளையடிப்பது தான் அவர் இனத்தவர்களின் குலத் தொழில். பல வருடங்களுக்கு முன்னால் செய்து கொடுத்த ஒரு சத்தியத்தை நிறைவேற்ற கல்லூரி மாணவியான நாயகி நிஹாரிகாவை, விஜய் சேதுபதி  கடத்துகிறார் . நிஹாரிகாவை தேடி வந்து அவரை காப்பாற்ற காதலன் கௌதம் கார்த்திக் போராடுகிறார். இறுதியில் விஜய் சேதுபதியின் சத்தியம் ஜெயித்ததா அல்லது கௌதம் கார்த்திக் ஜெயித்தாரா என்பது தான் கதை. 

கதை கேட்க கொஞ்சம் சீரியஸாக தெரிந்தாலும், படத்தில் ஒரு செகண்ட் கூட சீரியசாக இல்லை. சுட்டித்தனமான காலேஜ் பையனாக வரும் கௌதம் செய்யும் சேஷ்டைகள், பெரும்பாலான இடங்களில் லூசுத்தனமாக தெரிவதனால், ரசிக்க முடியவில்லை. கௌதமின் நண்பராக ஒவ்வொரு சீனிலும் வருகிறார் "ப்ரெண்டு, பீல் ஆயிட்டாப்புல" புகழ் டேனியல். கௌதமுக்கு காமெடி வராததால், படம் முழுக்க யார் யாரிடமோ இவர் அடி வாங்குகிறார்.


காதல், கடத்தல், காப்பாற்றுவது என எந்த சீனிலும் எமோஷன், செண்டிமென்ட் போன்ற விவகாரங்களே இல்லாமல் காமெடியாகவே சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஆனால், அதற்கான அனுபவம் அவருக்கு போதவில்லையோ என்னவோ, ஆடியன்ஸுக்கு அது செட்டாக வில்லை. 

முழுக்க முழுக்க சிரிப்பாக எடுக்க முயற்சித்து, முக்கால்வாசி இடங்களில் நடிகர்கள் மொக்கை போட்டு தள்ளுகின்றனர். பல இடங்களில் காமெடி ஒர்க் அவுட் ஆகிறது. அங்கங்கே டபுள் மீனிங் காமெடிகளை நம்பியிருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் வயிறு குலுங்க சிரிக்கலாம். ஆனால், பெரும்பாலான இடங்களில் சிரிப்பு வரவில்லை.


படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் மட்டும் கொஞ்சம் சீரியஸானது. அவரின் கெட்அப், நடிப்பு என எல்லாமே காட்சிகளுக்கு பொருத்தமாக உள்ளது. படத்தின் ஒரே ப்ளஸ் என அவரை சொல்லலாம். கௌதம் கார்த்திக் மீண்டும் அதே சுட்டிப்பையன் ரோலில் வருகிறார். திரும்பத் திரும்ப ஒரே ரோலில் பார்ப்பதால், அவர் ஆக்டிங்கில் சிறப்பாக எதுவும் தெரியவில்லை. டேனியலுக்கு 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் கிடைத்த அதே ரோல். எழுத்துப்பிழை இல்லாமல் செய்துள்ளார். ராஜ்குமார், ரமேஷ் திலக் சிறப்பாக நடித்துள்ளார்கள். அவர்கள் வரும் சீன்களை இன்னும் கொஞ்சம் சிறப்பாக எழுதியிருக்கலாம். நிஹாரிகா, காட்டுவாசி பெண்ணாக வரும் காயத்ரீ இருவரின் ஆக்டிங்கும் ஓகே.


கதை கொஞ்சம் புதுசுதான். ஆனால், எடுத்த விதத்தில் சொதப்பல். ஜாலியான ஸ்க்ரிப்ட் என்பதால், ஷூட்டிங் ஸ்பாட்டில் பயங்கர லூட்டியாக படம்பிடித்துள்ளது தெரிகிறது. ஆனால், படம் பார்க்கும் நமக்கு அது ரீச்சாக வில்லை. திரைக்கதை வசனம் கொஞ்சம் கவனிக்கப்பட்டிருந்தால் படம் வேற லெவலுக்கு வெற்றி பெற்றிருக்கும். 

விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர்கள் பார்க்கலாம்... மற்றபடி ஒதுங்கி இருப்பது பெஸ்ட்...

நம்ம ரேட்டிங் - 2/5

இந்த படத்தின் ஸ்டில்ஸ் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP