விசிறி –திரை விமர்சனம்

விசிறி –திரை விமர்சனம்
 | 

விசிறி –திரை விமர்சனம்

  

நட்சத்திரங்கள்: ராம் சரவணா, ராஜ் சூர்யா, ரெமோனா ஸ்டெபானி, டி.அரசகுமார்,ஷர்மிளா, இசை: தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்நாத், நவீன் சங்கர், ஒளிப்பதிவு: விஜய் கிரண், இயக்கம்: வெற்றி மகாலிங்கம், தயாரிப்பு: ஜமால் சாகிப்-ஜாபர் ஆதிக்.             

தீவிரமான அஜித் ரசிகர் ராஜ் சூர்யா. அதேபோல், விஜய் ரசிகர் ராம் சரவணன். சமூக வலைதளத்தில் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கிறது. இந்நிலையில், ஒரு பிரச்னையிலிருந்து ரமோனா  ஸ்டெபானியைக் காப்பற்றும் ராஜ் சூர்யா, அவர் மீது காதல் வயப்படுகிறார். விஜய் ரசிகரையே காதலித்து கல்யாணம் செய்யும் தீர்மானத்துடன் அவர் இருப்பதை அறிந்து, தான் ஒரு விஜய் ரசிகன் என்று பொய் சொல்லி, காதலிக்க தொடங்குகிறார்.   

இந்நிலையில், போஸ்டர் ஒட்டுவதில் ராஜ் சூர்யாவுக்கும், ராம் சரவணனுக்கும் இடையே நடக்கும் சண்டையில் ராம் சரவணனின் தங்கை தான் ரமோனா என்பதும், ராஜ் சூர்யா பொய் சொல்லிக் காதலித்ததும் வெட்ட வெளிச்சமாகிறது. கடைசியில், ராஜ் சூர்யா - ரமோனா ஒன்று சேர்ந்தார்களா?  தல - தளபதி என அடித்துக் கொண்டிருந்த ராஜ் சூர்யா - ராம் சரவணன் இணைந்தார்களா? என்பதே கதை. 

விஜய் –அஜித் இருவரும் சினிமாவில் சம போட்டியாளர்களாக இருந்த போதிலும், நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக இருக்கும் போது, அவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில்  சண்டை போட்டுக்கொண்டு சலசலப்பை ஏற்படுத்தாமல், இருவரது ரசிகர்களும் இணைந்தால் எவ்வுளவு சிறப்பாக இருக்கலாம் என்கிற போதனையை ஆக்‌ஷன், காமெடி, காதல் கலந்து, விஜய்–அஜித் ரசிகர்களை மட்டும் குறிவைத்து எடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றி மகாலிங்கம். 

ராஜ் சூர்யா, ராம் சரவணன் என இருவரும் தல - தளபதி ரசிகர்களாக மாறி இருக்கின்றனர். போஸ்டர் ஓட்டுவதில் தொடங்கி, சமூக வலைதளங்களில் சண்டை போடுவது வரை நிஜமான விசிறிகளாகவே வாழ்ந்துள்ளனர். நாயகி ரமோனா ஸ்டெபானியும், நாயகர்களின் பெற்றோர்களாக வரும் நடிகர்- நடிகைகளும் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தை பாதகம் இல்லாமல் செய்திருக்கின்றனர்.  

தன்ராஜ் மாணிக்கம், நவீன் ஷங்கர், சேகர் சபரிநாத் என மூவர் கூட்டணியின் இசை படத்திற்கு வலு சேர்க்கிறது. விஜய் கிரணின் ஒளிப்பதிவு சிறப்பு.  ரேட்டிங் 2.5/5 

 newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP