6 அத்தியாயம் – திரை விமர்சனம்

6 அத்தியாயம் – திரை விமர்சனம்
 | 

6 அத்தியாயம் – திரை விமர்சனம்

6 அத்தியாயம் – திரை விமர்சனம்

நட்சத்திரங்கள்: தமன், விஷ்ணு,‘பசங்க’ கிஷோர், சஞ்சய், வினோத், பேபி சாதன்யா, இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, இயக்கம்: கேபிள் சங்கர், சங்கர் தியாகராஜன், அஜயன் பாலா, சுரேஷ், லோகேஷ். ஸ்ரீதர், வெங்கடேசன், தயாரிப்பு : சங்கர் தியாகராஜன். 

ஆறு அத்தியாயங்கள், ஆறு இயக்குநர்கள், ஆறு கதைகள்...!  

1-வது அத்தியாயம் ‘சூப்பர் ஹீரோ’ : சூப்பர் ஹீரோக்களின் கதையைப் படிக்கும் ஒரு இளைஞன், தன்னையும் சூப்பர் ஹீரோவாகவே நினைத்துக் கொள்கிறான். தனக்கு வேண்டியவர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறான். அவன், ஒரு டாக்டரை சந்தித்து தன்னையொரு சூப்பர் ஹீரோவென அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அந்த சூப்பர் மேனை சோதிக்கும் டாக்டர் என்ன செய்தார்? என்பது இந்த அத்தியாயம்.

2-வது அத்தியாயம் ‘இனி தொடரும்’ : ஒரு இளைஞனை, சிறுமி ஒருத்தி பயமுறுத்திக் கொண்டே இருக்கிறாள். அதைப் பார்க்கும் மற்றொரு பெண், ‘அவனை ஏன் பயமுறுத்துகிறாய்?’ என்று கேட்க, ‘தன்னை, அவன் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டதாக’ சொல்லி அதிரவைக்கிறாள். இருவரும் அவனை எப்படி பழிவாங்கினார்கள்? என்பது இந்த அத்தியாயத்தின் கதை.

6 அத்தியாயம் – திரை விமர்சனம்

3-வது அத்தியாயம் ‘மிசை’: ரூம் மேட்ஸ், தன் காதலியின் போட்டோவுக்கு முத்தம் கொடுப்பதை பார்க்கும் ஒருவன், தன் நண்பர்களை என்ன செய்தான்? என்பதே இந்த அத்தியாயத்தின் கதை.

4-வது அத்தியாயம் ‘அனாமிகா’:நகரத்துக்கு வெளியே இருக்கும் மாமா வீட்டுக்குச் செல்கிறான் ஒரு வாலிபன். அப்போது, மாமா அவசர வேளையாக வெளியே செல்ல, தனியாக இருக்கும் அந்த வாலிபன், அந்த வீட்டில் ஒரு பெண் பேய் இருப்பதாக உணர்கிறான். இறுதியில் என்ன ஆனது என்பது இந்த அத்தியாயத்தின் கதை.

5-வது அத்தியாயம் ‘சூப் பாய் சுப்ரமணி’:  இந்த சூப் பாய் எந்தப் பெண்ணிடம் பேசினாலும், அந்தப் பெண்ணிடம் நெருங்க விடாமல் செய்வதோடு, அவனை அடி வாங்கவும் வைக்கிறது ஒரு பேய். அந்தப் பேய் யார்? ஏன் இப்படி செய்கிறது என தெரிந்துக் கொள்ள மந்திரவாதியிடம் செல்கிறான். அந்த மந்திரவாதி பேய் ஓட்ட என்ன செய்தார்? என்பது இந்த அத்தியாயத்தின் கதை.

6 அத்தியாயம் – திரை விமர்சனம்

6-வது அத்தியாயம் ‘சித்திரம் கொல்லுதடி’: ஓவியரான இளைஞனுக்கு, ஒரு பெண் ஓவியம் வரைவதற்கான ஆர்டர் வருகிறது. அதற்கு ரெபரன்ஸுக்காக பழைய புத்தகக் கடைக்கு சென்ற அவனுக்கு கோகிலா என்ற நாவல் புத்தகம் கிடைக்கிறது. அதில் சொல்லப்பட்டிருக்கும் சாமுத்திரிகா லட்சணத்துடன் பெண் ஓவியத்தை வரைய ஆரம்பிக்கிறான். ஆனால், கண்ணை மட்டும் அவனால் வரைய முடியவில்லை. இறுதியில் என்ன ஆனது? என்பது இந்த அத்தியாயத்தின் கதை.

'6 அத்தியாயம்’ என்கிற டைட்டிலுக்கு பொருத்தமாக இப்படத்தில், அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குநர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல கதையின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் கிளைமாக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது. எல்லா கதையிலும் உள்ள ஒரே ஒற்றுமை பேய்தான்.

6 அத்தியாயம் – திரை விமர்சனம்

இந்த புதிய முயற்சிக்கு வெல்கம் சொல்லலாம்! ஆறு குறும்படங்களை ஒன்றாகத் தொகுத்து ஒரே படமாக்கி இருப்பதால், ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டே பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு, இந்த மினி மீல்ஸ் போதுமானதாக இல்லை!  

6 அத்தியாயங்களில் அனைவரையும் கவர்ந்தது, கில்மா காமெடியில் சொல்லப்பட்ட ‘சூப் பாய் சுப்ரமணி’,  திகில் பின்னணியுள்ள ‘சித்திரம் கொல்லுதடி’  கதைகள் தான்! 

இதில் தமன், விஷ்ணு,‘பசங்க’கிஷோர், சஞ்சய், வினோத், பேபி சாதன்யா, இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோர் நடித்துள்ளனர். ரேட்டிங்  2/5


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP