அபியும் அனுவும் - திரை விமர்சனம்

அபியும் அனுவும் - திரை விமர்சனம்
 | 

அபியும் அனுவும் - திரை விமர்சனம்

அபியும் அனுவும் - திரை விமர்சனம்

நட்சத்திரங்கள்: டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், ரோஹிணி, சுஹாசினி, பிரபு, மனோபாலா, கலைராணி, தீபா ராமானுஜம், உதயபானு மகேஸ்வரன், இசை: தரன்குமார், ஒளிப்பதிவு: அகிலன், இயக்கம்: பி.ஆர்.விஜயலட்சுமி, தயாரிப்பு: சரிகம ஃபிலிம் லிமிடெட் யூட்லீ ஃபிலிம்ஸ்.

’டெஸ்ட் டியூப் பேபி’யை பின்னணியாக வைத்து உருவாகியிருக்கும் திரைப் படம்! 

ஊட்டி அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் அனு (பியா), சமூக அக்கறை உள்ளவர். தனது ஒவ்வோரு ஆக்ட்டிவிட்டீஸையும் ஃபேஸ்புக்கில் பதிவு செய்து வருகிறார். சென்னையில் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்யும் அபிமன்யூவை (டொவினோ தாமஸ்)  அனுவின் ஆக்ட்டிவிட்டீஸ் இம்ப்ரெஸ் பண்ணுகிறது. ஃபேஸ் புக் வழியாக இருவரும் நட்பாகி, பிறகு காதலர்களாகின்றனர்.

பெற்றோருக்கு தெரிவிக்காமலேயே திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையை துவங்குகின்றனர். இனிய இல்லற வாழ்க்கையில் அனு கர்ப்பம் தரிக்கிறாள், அப்போது, வேலைக்காரி வடிவத்தில் வந்து சேருகிறது வில்லங்கம்! கணவன் – மனைவியாக வாழும் அபி - அனு இருவரும், ’ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்’ என்கிற உண்மை தெரிய வருகிறது! அது, எப்படி சாத்தியம்? கர்ப்பிணி அனுவின் கதி என்ன? என்பது மீதிக் கதை!     

உண்மைச் சம்பவத்தின் பின்னணியில், ஒரு இளமைத் துள்ளலான காதலையும், அந்தக் காதலர்களுக்கு வரும் எதிர்பாராத சிக்கலையும் வைத்து படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார் பெண் இயக்குநர் பி.ஆர்.விஜயலட்சுமி. முதல் பாதியில் காதல், கலாட்டா என செம ஜாலியாகப் போகும் கதையில், திடீரென ஒரு ’ஷாக்கிங் ட்விஸ்ட்’ வைத்து கதையின் வேகத்தைக் கூட்டுகிறார்!  

அபியும் அனுவும் - திரை விமர்சனம்

எப்போதும் அரை ட்ராயரோடு அலையும் நாயகி பியா பாஜ்பாய், தாராளமாய் கிளாமர் காட்டி கிறங்க வைக்கிறார். காதல் காட்சிகளில் நெருக்கம் காட்டும் போதும், ’லிப் லாக்’ சீனில் ஹீரோவை ’லாக்’ பண்ணும் போதும் பியாவிடம் தாராளம் கரை புரளுகிறது! கதைக்கு அவசியம் இருக்கும் போது கவர்ச்சி மட்டுல்ல, மொட்டையும் போட அவர் தயங்க வில்லை! குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத சிக்கல் வந்த பிறகு, பழைய குதூகலம் மறந்து, உருக்கத்தைக்காட்டி உருகவும் வைக்கிறார்.       

’ஸ்மார்ட் லுக்’கில் இருக்கும் நாயகன் டெவினோ தாமஸ் நிஜமான ஐடி கம்பெனி ஆள் போலவே இருக்கிறார். ஆனால், மலையாளம் கலந்து பேசும் அவரின் தமிழைத் தான் தாங்க முடியவில்லை! ரசனையான காதலனாக, மனைவியைத் தாங்கும் பொறுப்பான கணவனாக பாந்துவமாக நடித்திருக்கிறார்.     

நாயகனின் பெற்றோர் தீபா ராமானுஜம் - உதயபானு மகேஸ்வரன், தாய் ரோகிணி, தாய் போல தாங்கும் சுகாசினி, கணவர் பிரபு, வேலைக்காரி கலைராணி, ஐடி கம்பெனி முதலாளி மனோபாலா ஆகியோர் தங்களின் அனுபவ நடிப்பை வழங்குகின்றனர். 

தரன்குமார் இசையும், அகிலனின் ஒளிப்பதிவும் கதையோடு சேர்ந்து பயணிக்கிறது. ரெட்டிங் 2.5/5

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP