12 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்யத் தயாராகும் முன்னணி நடிகர்!

பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரின் முதல் மனைவியின் மூத்த மகன் அர்ஜூன் கபூர். ஶ்ரீதேவியின் கணவர் என அடையாளப் படுத்தினால் நம் மக்களுக்கு எளிதில் விளங்கும். நம் அம்மாவுக்கு துரோகம் செய்து விட்டாரே என நினைத்தாரோ என்னவோ, ஶ்ரீதேவி இறக்கும் வரை அப்பாவிடமிருந்து விலகி இருந்தார் அர்ஜூன்.
 | 

ஜான்வியின் முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே எப்படி ஶ்ரீதேவி இறந்தாரோ, அதே போல் அர்ஜூனின் முதல் படம் வெளியாவதற்கு முன்பே அவரது அம்மா மோனா செளரி கபூரும் இறந்து விட்டார். பிறகு தனது தங்கை அன்சுலா கபூருடன் வசித்து வந்தார் அர்ஜூன். 

விஷயம் என்னவென்றால், பாலிவுட் நடிகை மலைகா அரோராவுடன் அவருக்குக் காதல் என பாலிவுட் மீடியாக்கள் எழுதித் தீர்த்தன. ஒன்றாக பார்ட்டி, ஷாப்பிங், சினிமா என வெளியிடங்களுக்கு சென்று வரும் இவர்களை அவ்வப்போது மீடியாக்கள் கவர் செய்யும். அர்ஜூனை விட 12 வயது அதிகமானவரான மலைகா சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானை திருமணம் செய்துக் கொண்டு கடந்த வருடம் விவாகரத்துப் பெற்றவர். அர்ஹான் என்ற 16 வயது மகனுக்குத் தாய். 

ரொம்ப நாட்களாக இவர்களுக்குள் எதோ இருக்கிறது என அனைவரும் சொல்ல, ஆனால் வழக்கம்போல் மெளனம் சாதித்தனர் சம்பந்தப் பட்ட இருவரும். இந்நிலையில் இனிமேலும் இந்த ரிலேஷன் ஷிப்பை மறைக்க வேண்டாம் எனக் கருதுகிறாராம் மலைகா. அதனால் விரைவில் தங்களது காதலை ஒப்புக் கொண்டு திருமணத்திற்கு தயாராவார்கள் என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள். 

வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்வது பாலிவுட்டில் ட்ரெண்ட் ஆகி வருவது பலருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. 
www.newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP