உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல்!! நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்!!

நேற்று இரவு இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்,10 பேர் படுகாயம் அடைத்துள்ளனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூபாய் 1 கோடி இழப்பீடாக அறிவித்துள்ளார் நடிகர் கமல்.
 | 

இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இரவு பகலாக சென்னையில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களாக செட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இவிபி பிலிம் சிட்டியில் நடிகர் கமல், காஜல் அகர்வால் பங்கு நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், படப்பிடிப்பு அரங்கில் வேறொரு இடத்தில் செட் அமைக்கும் பணி நடைப்பெற்று வந்தது.

இந்நிலையில் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டிருந்த போது கிரேனின் ஒயர் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்கள் குறித்து உருக்கமாக தனது இரங்கலைத் தெரிவித்திருந்த நடிகர் கமல், இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி வழங்குவதாக அறிவித்தார். மேலும், கிரேன் விபத்தில் இருந்து தான் நூலிழையில் உயிர்தப்பியதாகவும், உயிரிழந்தவர்களுக்கு இந்த இழப்பீடு போதாது என்றும் தெரிவித்தார். மேலும், என் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பாகவே இதை கருதுகிறேன் என்று தெரிவித்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP