ஹீல்ஸால் கீழே விழுந்த கஜோல் - வைரலாகும் வீடியோ!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் கஜோல்.
 | 

ஹீல்ஸால் கீழே விழுந்த கஜோல் - வைரலாகும் வீடியோ!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் கஜோல். வழக்கம் போல் திருமணமும் தாய்மையும் கஜோலின் திரை வாழ்க்கைக்கு இடைவெளி விட்டது. ஆனால், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை, கஜோல் நடிக்க வரும்போதெல்லாம், அவரின் ரசிகர்கள் அதனை கொண்டாடி தீர்க்க மறப்பதில்லை. சமீபத்தில் தமிழில் வேலையில்லா பட்டாதாரி படத்தில் வில்லியாக நடித்து இருந்தார். அப்படம் அவருக்கு சரியான வரவேற்பை பெற்றுத் தரவில்லை. தற்போது ஈலா படத்தில் முக்கிய வேடத்திலும், ஜீரோ படத்தில் சிறப்பு வேடத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மும்பையின் ஃபீனிக்ஸ் மார்க்கெட் மாலில் கடை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கஜோல் சென்று இருக்கிறார். அப்போது, பாதுகாவலர் புடை சூழ வெள்ளை நிற உடையில் வந்தவர், திடீரென கால் இடறி விழுந்து உள்ளார். இருப்பினும் தரையில் முழுமையாக விழும் முன்பே கஜோலை அருகில் இருந்த காவலர்கள் பிடித்து தூக்கிவிட்டனர். இப்படி விழுந்ததுக்கு காரணம் அவர் அணிந்திருந்த பாய்ன்டட் ஹீல் காலணி தான் எனக் கூறப்படுகிறது. கஜோல் விழுந்ததை சிலர் வீடியோ எடுத்து இணைய தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதேபோல் கடந்த 2015-ம் ஆண்டில் நடந்த தில்வாலே படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியிலும் கீழே விழுந்தார். அப்போது அருகில் இருந்த சக நடிகர் வருண் அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

இத்தனை கஷ்டம் கொடுக்கும் அந்த ஹீல்ஸ் கஜோலுக்குத் தேவையா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP