வாயால் வாய்ப்பை இழந்த ஜான்வி கபூர்

தற்போது பாலிவுட்டில் வாரிசு ஹீரோ, ஹீரோயின்கள் அதிகமாக அறிமுகமாகி வருகிறார்கள். ஏற்கனவே அறிமுகமானவர்களுக்குள் போட்டி அதிகரித்துவிட்டது. ரன்பீர் கபூர், சோனம் கபூர், ஆலியா பட் என முன்னணி நடிகர்கள் கூட வாரிசு நடிகர்கள்தான்.
 | 

வாயால் வாய்ப்பை இழந்த ஜான்வி கபூர்

வாயால் வாய்ப்பை இழந்த ஜான்வி கபூர்

தற்போது பாலிவுட்டில் வாரிசு ஹீரோ, ஹீரோயின்கள் அதிகமாக அறிமுகமாகி வருகிறார்கள். ஏற்கனவே அறிமுகமானவர்களுக்குள் போட்டி அதிகரித்துவிட்டது. ரன்பீர் கபூர், சோனம் கபூர், ஆலியா பட் என முன்னணி நடிகர்கள் கூட வாரிசு நடிகர்கள்தான். இந்த வரிசையில் மேலும் சில வாரிசு நடிகைகள் அறிமுகமாக இருக்கிறார்கள். நடிகை ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி மற்றும் குஷி, ஷாருக்கானின் மகளான சுஹானா மற்றும் சயீப் அலிகானின் மகள் சாரா அலிகான் என பெரிய பட்டாளமே தங்களது சினிமா பிரவேசத்தைத் தொடங்க காத்துக் கிடக்கிறது. 

இந்த வரிசையில் முன்னணியில் இருப்பது ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும், சயீப் அலிகானின் மகள் சாரா அலிகானும் தான். இஷான் கட்டார் இயக்கியுள்ள தடக் படம் மூலம் ஜான்வி ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்த படம் ஜூலையில் வெளியாக உள்ளது. அதேநேரம், சாராவின் அறிமுக படமான கேதர்நாத் டைரக்டர் – தயாரிப்பாளர் மோதலால் பாதியில் நிற்கிறது. 

இந்நிலையில், ஸ்ரீதேவி மற்றும் சயீப் அலிகான் குடும்பத்துக்கு நெருக்கமான இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் - இயக்குநர் ரோஹித் ஷெட்டி கூட்டணியில் 'சிம்பா' படம் உருவாக இருக்கிறது. வரும் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிக்க ஜான்வி மற்றும் சாரா ஆகிய இருவரில் ஒருவரை தயாரிப்பு நிறுவனம் பரிசீலித்துள்ளது. இதில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்த வாய்ப்பு ஜான்விக்கு கிடைக்கும் என பாலிவுட் திரையுலகம் எதிர்பார்த்துக் கொன்டிருந்த வேளையில், தவளை தன் வாயால் கெடும் என்பது போல, தன் வாயால் பெரிய வாய்ப்பை இழந்து நிற்கிறார் ஜான்வி. ரன்வீர் சிங்குடன் தான் நடிப்பது குறித்து அவர் புலம்பியது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் காதுகளை எட்டியது.

இதனால், ரன்வீர்சிங்-ரோஹித் ஷெட்டி- கரண் ஜோஹர் என பெரிய பிரபலங்கள் இணையும் பட வாய்ப்பு சாரா அலிகானின் கதவுகளை தட்டி இருக்கிறது.  இதனால், சாராவும் செம ஹேப்பி அண்ணாச்சி. இந்த தகவலை, தயாரிப்பாளர் கரண் ஜோஹர் மற்றும் இயக்குநர் ரோஹித் ஷெட்டி இருவருமே உறுதி செய்திருக்கிறார்கள். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP