இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு!!

இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு!!
 | 

இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு!!

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து பலியானவர்களில் பிரபல கார்டூனிஸ்ட்  மதனின் மருமகன் கிருஷ்ணாவும் ஒருவராவார். இயக்குனர் ஷங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயம் அடைத்துள்ளனர். 

இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு!!

உயிரிழந்த மூன்று பேரும் இந்தியன் 2 திரைப்படத்தில் அசிஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றிய கிருஷ்ணா,மது மற்றும் சந்திரன் ஆகியோர் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு!!​​​​​​​

இதில், கிருஷ்ணா, பிரபல கார்டூனிஸ்ட்  மதனின் மருமகன் ஆவார். மதனின் இளைய மகள் அமிதாவும், விபத்தில் பலியான கிருஷ்ணாவும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்கள் இருவரும் இணைந்து பல விளம்பரங்களும், கார்பரேட் படங்களும் எடுத்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP