இந்தியன் தாத்தா ரிட்டர்ன்ஸ்... கமல் ஜோடியாக நயன்தாரா

முதல் பாகத்தில் வந்த இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை இரண்டாம் பாகத்தில் மேலும் வயதானவர்போல் மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விரிவான செய்திகளுக்கு newstm.in
 | 

இந்தியன் தாத்தா ரிட்டர்ன்ஸ்... கமல் ஜோடியாக நயன்தாரா

ஷங்கரின் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் வேலைகள் தொடங்கி உள்ளன. படத்தை இயக்கும் ‌ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வருவதால், இந்த மாத இறுதியில் படப்பிடிப்புக்கான வேலைகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அரசியல் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு முழுமையாக படப்பிடிப்பில் கமல்ஹாசன் ஈடுபடுகிறார். இந்தியன்–2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று ஏற்கனவே அவர் கூறியுள்ளார். 

முதல் பாகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை எதிர்ப்பதாக கதை இருந்தது. இரண்டாம் பாகம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான கதை என்கின்றனர். கமல் அரசியலில் ஆர்வம் காட்டுவதால், இதில் நடிக்கிற இருவேடங்களிலுமே கமல் ஊழலுக்கு எதிராகப் போராடுவார் என்றும் பேசப்படுகிறது. கமலுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிப்பார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தியன் தாத்தா தீவிபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக போலீஸ் அதிகாரிகள் கருதுவது போன்றும் அவரோ வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று போன் செய்வது போன்றும் முதல் பாகத்தை முடித்து இருந்தனர். இரண்டாம் பாகத்தில் அவர் இந்தியா திரும்பி வந்து ஊழல் அரசியல்வாதிகளை வர்ம கலையால் வீழ்த்துவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர். 

முதல் பாகத்தில் வந்த இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை இரண்டாம் பாகத்தில் மேலும் வயதானவர்போல் மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வைத்து கமல்ஹாசனின் வயதான தோற்றத்துக்கு விசே‌ஷ மேக்கப் போடுகின்றனர். 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP