'ஐஐஎஃப்ஏ 2018' தருணங்கள்: கரணின் கிண்டல் முதல் ரேகாவின் நடனம் வரை

கரண் ஜோகரின் கேலி, ஸ்ரீதேவி குடும்பத்தினரின் உணர்ச்சிப் பெருக்கு, ரேகாவின் அட்டகாச நடனம் என ஐஐஎஃப்ஏ விருதுகள் விழாவில் கவனிக்க வைத்த தருணங்கள் ஏராளம்.
 | 

'ஐஐஎஃப்ஏ 2018' தருணங்கள்: கரணின் கிண்டல் முதல் ரேகாவின் நடனம் வரை

கரண் ஜோகரின் கேலி, ஸ்ரீதேவி குடும்பத்தினரின் உணர்ச்சிப் பெருக்கு, ரேகாவின் அட்டகாச நடனம் என ஐஐஎஃப்ஏ விருதுகள் விழாவில் கவனிக்க வைத்த தருணங்கள் ஏராளம்.

பாலிவுட் உலகின் அனைத்துத் துறை தொழில்நுட்ப கலைஞர்களும் சென்ற வாரம் மூன்று நாட்கள் பாங்காக் நகரின் வலம் வந்தனர். 19-வது 'ஐஐஎஃப்ஏ' (இன்டர்நேஷனல் இந்தியன் அகாடமி அவார்ட்ஸ்) விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. உணர்ச்சிகளின் குவியலாக காட்சியளித்த இந்த வருடத்தின் ஐஐஎஃப்ஏ விருது வழங்கும் விழாவில் நம் கவனம் ஈர்த்தவற்றின் தொகுப்பு இதோ...

க்ரீன் கார்ப்பெட் மொமெண்ட்ஸ் 

ஆஸ்காருக்கு 'ரெட் கார்ப்பெட்' என்பது போல் 'ஐஐஎஃப்ஏ'-க்கு 'க்ரீன் கார்ப்பெட்'. நடிகர் - நடிகையரின் 'க்ரீன் கார்ப்பெட்' வாக் என்பது ஐஐஎஃப்ஏ-வின் ஹைலைட்டான விஷயம். விருதுகளுக்குப் போட்டி உள்ளே நடைபெறுவதற்கு முன்னர் வெளியே கிரீன் கார்ப்பெட்டில் நடிகர்கள் கூட்டத்திற்குள் ஆடை அலங்காரத்திற்க்கான போட்டி நடைபெற்றது போல் ஒருவரை ஒருவர் மிஞ்சி அனைவரும் மிடுக்காகக்  காட்சியளித்தனர்.

'ஐஐஎஃப்ஏ 2018' தருணங்கள்: கரணின் கிண்டல் முதல் ரேகாவின் நடனம் வரை

மீடியாவின் வேடிக்கையான கேள்விகளுக்கு விளையாட்டாக பதிலளித்துச் சென்றனர். லூலியா வண்டூர், ஊர்வசி ரௌட்டலா, நாசரேத் பரூச்சா போன்றோர் குறிப்பிட்டு சொல்லும்படி கவனம் ஈர்த்தனர்.

ஐஐஎஃப்ஏ லைட்டர் மொமெண்ட்ஸ் 

பார்வையாளர்களின் அடுத்தப் பார்வை விழுந்தது தொகுப்பாளர்களின் மீதுதான். பிரம்மாண்டமாக காட்சி அளித்த மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க காத்திருந்தார் கரண் ஜோகர். இவர் தன் ஜோடி எங்கே என்று தேடிக்கொண்டு இருக்க, பார்வையாளர்களுக்கு மத்தியிலிருந்து ரன்வீர் சிங்கின் 'பத்மாவத்' படத்தின் அலாவுதீன் கில்ஜி கெட்டப்பில் வந்து இறங்கினார் ரித்தேஷ் தேஷ்முக். 

'ஐஐஎஃப்ஏ 2018' தருணங்கள்: கரணின் கிண்டல் முதல் ரேகாவின் நடனம் வரை

கரண் ஜோகரின் கிண்டல், கேலி மற்றும் சாமர்த்திய பேச்சும், ரித்தேஷின் கவர்ச்சிகரமான தோற்றமும், இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியும், பார்வையாளர்களை நொடிப் பொழுதில் நிகழ்ச்சியில் மூல்கும் வண்ணம் சுவாரஸ்யமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது.  

'ஐஐஎஃப்ஏ ராக்ஸ்' என்ற நிகழ்ச்சியை ஆயுஷ்மான் குரானா மற்றும் கார்த்திக் ஆரியன் என்ற இளம் கூட்டணியும் தொகுத்து வழங்கி  தங்களுக்கு என்று ஒரு முத்திரையை பதித்து விட்டுச் சென்றனர். கரண் - ரிதேஷ், காதல், கல்யாணம் மற்றும் காரனின் 2 குழந்தைகள் பற்றி பேசி ஏற்படுத்திய லைட்டர் மொமெண்ட்ஸ் கவர்ந்திழுக்கும்படி இருந்தது என்று பேசப்படுகிறது.

ஐஐஎஃப்ஏ பர்ஃபாமென்ஸ் மொமெண்ட்ஸ்

ஐஐஎஃப்ஏ மேடை பல நடிகர்களின் பர்ஃபாமென்ஸால் அலங்கரிக்கப்பட்டது. ரன்வீர் கபூர், வருண் தவான், ஷ்ரத்தா கபூர் அர்ஜூன் கபூர், பாபி தியோல் போன்றோர் தங்களின் அசத்தலான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் கொண்டு பார்வையாளர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். வருண் தவானின் உற்சாகம் ரசிகர்களையும் பற்றிக்கொண்டது என்பது போட்டோ காட்சிகளைப் பார்க்கும்போதே விளங்குகிறது.

'ஐஐஎஃப்ஏ 2018' தருணங்கள்: கரணின் கிண்டல் முதல் ரேகாவின் நடனம் வரை

ஏழு வருடங்களுக்குப் பிறகு ஐஐஎஃப்ஏ-வில் கால் பதித்த பாபி தியோலின் பேச்சிலும் நடனத்திலும் மிகவும் உற்சாகமாக காட்சியளித்தார். ஆலியா பட்டுடன் கைகோர்க்கவிருக்கும் ரன்பிர் கபூரின் ஆட்டத்தில் வசீகரம் இருந்தது. இடையிடையே வந்த எனர்ஜய்சிங் பர்ஃபாமென்ஸ் நிகழ்ச்சியை தொய்வில்லாமல் கொண்டு சென்றது.

ஐஐஎஃப்ஏ அவுட்ஸ்டாண்டிங் மொமெண்ட்ஸ் 

தனது உடலையும் உயிரையும் சினிமாவுக்காக அர்ப்பணித்து 34 வருடங்களாக பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பாலிவுட்  உலகத்தில் தனக்கென ஒரு நீங்கா இடத்தைப் பிடித்தவர் அனுபம் கெர். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல முகங்கள் ஏற்று ஹாலிவுட் படத்திலும் தலையைக் காட்டி இன்னமும் ஸ்ட்ராங்காக களத்தில் ஓடிக்கொண்டிருக்கும் அவருக்கு இந்த வருடத்தின் 'அவுட்ஸ்டாண்டிங் பர்ஃபாமெர்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவருக்கு அவரது நல்ல நண்பரான அனில் கபூர் வழங்கி கவுரவிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

'ஐஐஎஃப்ஏ 2018' தருணங்கள்: கரணின் கிண்டல் முதல் ரேகாவின் நடனம் வரை

ஐஐஎஃப்ஏ எமோஷனல் மொமெண்ட்ஸ்  

* 'மாம்' படத்தில் அசாத்தியமாக நடித்ததற்காக இந்த ஆண்டின் சிறந்த நடிகை விருது சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது. அவரின் சார்பாக இந்த விருதைப் பெறுவதற்கு அவர் குடும்ப உறுப்பினர்கள் - கணவர் போனிகபூர், மகள்கள்  ஜான்வி, குஷி கபூர் மற்றும் அனில் கபூர் மேடையில் காட்சி தந்தனர். 'ஐஐஎஃப்ஏ 2018' தருணங்கள்: கரணின் கிண்டல் முதல் ரேகாவின் நடனம் வரைஸ்ரீதேவி சார்பாக விருதை கையில் வாங்கிய போனிகபூர் உணர்ச்சிப் பெருக்கில் கண்கள் கசிந்து துக்கம் தொண்டை அடைக்க, வார்த்தைகள் வெளியில் வராமல் தவிக்க, அவரை அர்ஜுன் கபூர் சமாதானப்படுத்த அரங்கம் சில மணித்துளிகள் சோகத்தில் ஆழ்ந்தது. அதுமட்டுமல்லாமல், மறைந்த நடிகர்கள் சசி கபூர், வினோத் கண்ணா இருவரையும் நினைவுகூர்ந்து ஒரு நிமிட அஞ்சலியும் செலுத்தினர். அரங்கமே உணர்ச்சி பெருக்கில் ஆழ்ந்த இந்தத் தருணம் ரசிகர்களை ஐஐஎஃப்ஏ-வுடன் எமோஷனலாக அட்டாச் ஆக்கியது.   

* சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதை பெற்ற 'மாம்' படத்தில் நடித்த நவாஸுதீன் சித்திக் தனது விருதை அப்படத்தில் தன்னுடன் நடித்த ஸ்ரீதேவிக்கு சமர்ப்பிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

'ஐஐஎஃப்ஏ 2018' தருணங்கள்: கரணின் கிண்டல் முதல் ரேகாவின் நடனம் வரை

* இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை கேன்சரால் அவதிப்பட்டு வரும் இர்ஃபான் கான் தட்டிச் சென்றார். 'இந்தி மீடியம்' என்ற படத்தில் அற்புதமாக நடித்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.  ஐஐஎஃப்ஏ உறுப்பினர்களுக்கு ட்விட்டர் மூலம் தனது நன்றிகளை தெரிவித்தார் இர்ஃபான்.

* அனில் கபூரின் கம்பீரம், போனிகபூரின் உணர்ச்சிப் பெருக்கு, அர்ஜுன், ரன்பீர் கபூரின் ஹை எனர்ஜி பர்ஃபாமென்ஸ் என்று இந்த ஆண்டு கபூர்களின் ராஜ்ஜியம் சற்று மேலோங்கியே காணப்பட்டது. சில கபூர் மொமெண்ட்ஸ் இந்த ஐஐஎஃப்ஏ-வில் ஹைலைட்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் குவியும் டிவீட்களையும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்களையும் பார்க்கும்போது இந்த ஆண்டு ஐஐஎஃப்ஏ ரசிகர்களுடன் எமோஷனல் பாண்ட் ஏற்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை.

ஐஐஎஃப்ஏ மெஸ்மெரைசிங் மொமெண்ட்ஸ் 

மனதை கொள்ளை கொள்ளும் பல தருணங்கள் ஐஐஎஃப்ஏ நிகழ்ச்சியில் நடைபெற்றாலும், இத்தனை கலைஞர்கள் விருதுகள் சுமந்து சென்றாலும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து இன்பத்தில் உறைய வைத்தவர் ஜெமினி கணேசனின் மகள் ரேகாவின் நடனம் தான். "வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டு போகலை" என்ற வசனம் நடிகைகளில் இவருக்கு நன்றாகவே பொருந்தும் என்று அவரின் நடனம் அன்று நிரூபித்தது. 

'ஐஐஎஃப்ஏ 2018' தருணங்கள்: கரணின் கிண்டல் முதல் ரேகாவின் நடனம் வரை

"ஸலாம்-இ-இஷ்க்" என்ற பாடலில் தொடங்கி பல பாடல்களுக்கு தனது கால்களை அசைத்து பார்வையாளர்களை அவர்களின் கண்களை அசைக்கவிடாமல் வைத்தார் ரேகா. கனகச்சிதமாக பொருந்திய அவரின் முகலாய ராணி ஸ்டைல் ஆடை அவரின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் இருந்தது. இறுதியில் இளம் நடிகர்கள் பலர் அவரோடு சேர்ந்து மேடை ஏறி அவரின் ஆசிகளைப் பெற்று அவரை பாராட்டி மகிழ்ந்தனர். கேக்கின் மீது வைக்கும் செர்ரியைப் போல நிகழ்ச்சியின் கடைசியில் முத்தாய்ப்பாக அமைந்தது ரேகாவின் இந்த மெஸ்மெரைசிங் பர்ஃபார்மன்ஸ்.

ஐஐஎஃப்ஏ-வின் உரிமைகள் பெற்ற கலர்ஸ் தொலைக்காட்சி விரைவில் நிகழ்ச்சியை ஒளிபரப்பி நமது கண்களுக்கு கலர்ஃபுல் விருந்தளிக்கும் என்று நம்பப்படுகிறது. காத்திருப்போம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP