பாலியல் துன்புறுத்தல்; பிரபல ஹாலிவுட் நடிகர் மீது விசாரணை!

பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேஸி மீது பல்வேறு ஆண்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சுமத்திய நிலையில், அதில் ஒரு வழக்கில் வரும் 7ம் தேதி நீதிமன்றத்தில் அவர் ஆஜராக இருக்கிறார்.
 | 

பாலியல் துன்புறுத்தல்; பிரபல ஹாலிவுட் நடிகர் மீது விசாரணை!

பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேஸி மீது பல்வேறு ஆண்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சுமத்திய நிலையில், அதில் ஒரு வழக்கில் வரும் 7ம் தேதி நீதிமன்றத்தில் அவர் ஆஜராக இருக்கிறார்.

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேஸி , 'ஹவுஸ் ஆப் கார்ட்ஸ்' என்ற ஹாலிவுட் தொலைக்காட்சி தொடர் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் இந்த தொடர் மிகப்பெரிய ஹிட்டாகி இருந்தது. இந்தநிலையில், அந்தோணி ராப் என்ற ஒரு நடிகர், பல ஆண்டுகளுக்கு முன்னால் தன்னை ஸ்பேஸி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டி இருந்தார். இதைத் தொடர்ந்து வரிசையாக பல ஆண்கள் ஸ்பேஸி மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

பாஸ்டன் நகரில், ஒரு இளைஞருக்கு ஸ்பேஸி பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக அந்த இளைஞரின் தாய் குற்றம்சாட்டியிருந்தார். தொலைக்காட்சி பத்திரிகையாளரான அந்த இளைஞரின் தாய், 18 வயதேயான தன் மகனிடம், ஒரு பாரில் வைத்து ஸ்பேஸி தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார். ஸ்பேஸிக்கு எதிராக அவர் தொடுத்த வழக்கு, நான்ட்டக்கெட் பகுதியின் நீதிமன்றம் முன் வரும் 7ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்று நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப் படுகிறார்.

முன்னதாக கடந்த ஆண்டு, இந்த குற்றச்சாட்டுகள் எழுந்ததுபோது, தனக்கு எதுவும் நியாபகம் இல்லையென்றும், அப்படி ஏதாவது நடந்திருந்தால் மன்னிக்கவும் என்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் ஸ்பேஸி கூறியிருந்தார். தான் ஓரினச் சேர்க்கையாளர் என்றும் முதன்முதலாக அவர் அப்போது தெரிவித்தார். ஹவுஸ் ஆப் கார்ட்ஸ் உட்பட பல்வேறு ஹாலிவுட் ப்ராஜெக்டுகளில் இருந்து ஸ்பேஸி நீக்கப்பட்டார். 

இந்நிலையில், தற்போது அவர் மீதான வழக்கு விசாரணை குறித்த செய்தி வெளியான பின்னர், ஹவுஸ் ஆப் கார்ட்ஸ் தொடரில் வருவது போலவே ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்பேஸி வெளியிட்டார். அதில் தனது கதாபாத்திரம் பேசுவது போலவே, இந்த வீடியோவில் பேசும் ஸ்பேஸி,  தான் நிரபராதி என்றும், தன்னை மீண்டும் தொடரில் சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். இது பலரை முக்கால் சுழிக்க வைத்துள்ளது. 

முதலாவதாக குற்றம்சாட்டிய அந்தோணி ராப், 1992 ஆம் ஆண்டு தனக்கு ஸ்பேஸி பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் 20 வருடங்களுக்கு முன்னால் நடந்த குற்றம் என்பதால், அது குறித்து சட்டபடி தற்போது வழக்கு பதிவு செய்ய முடியாது, என போலீசார் கூறியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP