குழந்தைகளுடனான உறவு: புதிய நிபந்தனைகளால் ஏஞ்சலினா - பிராட் பிட் கலக்கம்

ஏஞ்சலினா ஜோலி - பிராட் பிட் விவாகரத்து வழக்கில், பெற்றோருடான குழந்தைகளின் உறவைப் பேணும் விவகாரத்தில் நீதிமன்றம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
 | 

குழந்தைகளுடனான உறவு: புதிய நிபந்தனைகளால் ஏஞ்சலினா - பிராட் பிட் கலக்கம்

ஏஞ்சலினா ஜோலி - பிராட் பிட் விவாகரத்து வழக்கில், பெற்றோருடான குழந்தைகளின் உறவைப் பேணும் விவகாரத்தில் நீதிமன்றம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஆறு குழந்தைகளுடன் 12 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஏஞ்சலினா ஜோலி - பிராட் பிட் ஜோடிக்கு 2016 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு முற்றியது. இவர்கள் தாக்கல் செய்த விவாகரத்து மனு ஹாலிவுட் ரசிகர்களிடையே மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது. 

இவர்களது ஆறு குழந்தைகளில் மூன்று இந்த இணையருக்கு பிறந்த பிள்ளைகள், மூன்று பிள்ளைகள் தத்தெடுத்து வளர்க்கப்படுபவர்கள். 
இருவரும் விவகாரத்து மனு தாக்கல் செய்ததிலிருந்து ஆறு பிள்ளைகளும் ஏஞ்சலினா ஜோலியின் பாதுகாப்பிலேயே வளர்ந்து  வருகிறார்கள். தந்தை பிராட் பிட்டிற்கு அவ்வப்போது பிள்ளைகளை வந்து பார்க்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

வெகு நாட்களாக இப்படியே சென்றுகொண்டிருந்த இவர்களின் வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

தந்தை - பிள்ளைகளின் உறவுக்கு குறுக்கே வராமலிருக்க ஏஞ்சலினா ஜோலிக்கு நீதிமன்றத்தில் இருந்து இப்போது புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.  

"தாய் - தந்தை இருவரிடமும் ஆறு குழ்நதைகளும் அன்பானதும் ஆரோக்கியமான உறவை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் தந்தையுடனும் சுமூக உறவைத் தொடர ஏஞ்சலினா ஜோலி ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் அவர் குழந்தைகளை தந்தை பிராட் பிட் பாதுகாப்பில் விடவேண்டி இருக்கும்" என்று ஜோலிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆறு குழந்தைகளின் கைபேசி எண்களும் பிராட் பிட்டிற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், அவருக்கு எந்த நேரத்திலும் தன் பிள்ளைகளுடன் பேசவும், மெசேஜ் செய்யவும் அனுமதி உண்டு என்றும் அந்த நிபந்தனைப் பட்டியலில் குறிப்பிடப்படுள்ளது.

தன் பிள்ளைகளை அடிக்கடி சென்று சந்திக்க முடியும் என்ற எண்ணத்தில்தான் பிராட் பிட் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் "ஒன்ஸ் அப்பான் எ டைம்" என்ற படத்தை லாஸ் ஏஞ்சல்ஸில் படமாக்கப்பட வேண்டும் என்று அப்படக் குழுவினரைக் கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது. 

ஆனால், பயண விரும்பியான ஏஞ்சலினா ஜோலி தன்னை கட்டுப்படுத்துவதாக எண்ணி பிராட் பிட் மீது கடுமையான கோபத்தில் உள்ளார். 

"மேல்எஃபிசிஎன்ட் 2" என்ற படத்திற்காக தற்போது லண்டனில் வசித்து வருகிறார் ஜோலி. இவரின் பிள்ளைகளும் இவருடன் லண்டனில் தங்கி வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஜோலியின் 43-வது பிறந்தநாளை ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் கொண்டாடினர். 

ஏஞ்சலினா ஜோலி லண்டன் செல்வதில் தமக்கு எந்தப் பிரச்னையம் இல்லை என்றும், தன் பிள்ளைகளையும் பல மாதங்கள் உடன் கூட்டிச் சென்றிருப்பதே தமக்கு வருத்தமளிக்கிறது என்றும் பிராட் பிட் தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். 

இதற்கு தீர்வளிக்கும் வகையில், ஜூன் மாத இறுதியில் பிராட் பிட் தன் பிள்ளைகளை 6 நாட்களுக்கு தினமும் 10 மணி நேரம் லண்டனில் சந்திக்கலாம் என்று நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. மேலும், இவர்களின் சந்திப்பின்போது ஜோலி உடன் இருக்க தடையும் விதித்துள்ளது. 

ஜூலை மாத இறுதியில் பிள்ளைகளை பிராட் பிட்டிடம் ஒப்படைக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் கொண்டு சேர்க்க வேண்டியது ஜோலியின் பொறுப்பு என்றும், சிறிது நாட்களுக்குப் பின் அவர்களை லண்டன் கொண்டு வந்து ஜோலியின் பொறுப்பில் விட வேண்டியது பிட்டின் பொறுப்பு என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குழந்தைகளின் நலன் கருதி நீதிமன்ற நடவடிக்கைகளை பின்பற்றுவார்களா? அல்லது இந்த முன்னாள் ஜோடி தங்களது ஈகோவை மேலோங்கச் செய்வார்களா? என்பதே ஹாலிவுட் வட்டாரத்தில் கேள்வியாக இருக்கிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP