‘செல்பி’யில் சிரிக்கும் ஹீரோயின்கள்

சமந்தாவுக்கும், காஜலுக்கும் போட்டி, தமன்னாவுக்கும் ஸ்ருதிக்கும் மோதல், நயன்தாராவுக்கும், திரிஷாவுக்கும் கருத்துவேறுபாடு என்று சில நடிகைகள் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் பரவுகின்றன. மேலும் விரிவான செய்திகளுக்கு newstm.in
 | 

‘செல்பி’யில் சிரிக்கும் ஹீரோயின்கள்

சமந்தாவுக்கும், காஜலுக்கும் போட்டி, தமன்னாவுக்கும் ஸ்ருதிக்கும் மோதல், நயன்தாராவுக்கும், திரிஷாவுக்கும் கருத்துவேறுபாடு என்று சில நடிகைகள் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் பரவுகின்றன. ஆனால் நிஜத்தில் அவர்கள் நேரில் ஒருவரை யொருவர் சந்திக்கும்போது கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொள்கின்றனர். 

‘செல்பி’யில் சிரிக்கும் ஹீரோயின்கள்

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில், எந்த ஈகோவும் இல்லாமல் நடிகைகள் தமன்னா, சமந்தா, அதிதிராவ் ஹைத்ரி பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஒருவரையொருவர் சந்தித்ததும் கட்டிப்பிடித்து முத்தம் பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தனர். அதைக்கண்டு சிலர் இவர்களுக்குள் சினிமா வாய்ப்பை பெறுவதில் ஏற்படும் போட்டியால் மோதல் என்று அவ்வப்போது கிசுகிசு வருகிறதே என்ற முணுமுணுத்துக் கொண்டனர். 

‘செல்பி’யில் சிரிக்கும் ஹீரோயின்கள்

ஆனாலும் தங்களுக்குள் எந்த சச்சரவும் இல்லை என்பதை விளக்கும் விதமாக மூன்று ஹீரோயின்கள் முகத்திலும் சிரிப்பு பொங்கி வழிந்து கொண்டிருந்தது. ‘இது மறக்கமுடியாத சந்திப்பு’ என்று கூறிய அதிதி, சகநடிகைகள் தமன்னா, சமந்தாவுடன் இணைந்து செல்பி புகைப்படம் எடுத்து அதனை அவரது இணைய தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP