விஜய் தேவரக்கொண்டாவின் அடுத்த தமிழ் படம்!

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம், புகழின் உச்சிக்கு சென்ற டோலிவுட் நடிகர் விஜய் தேவரக்கொண்டா, நோட்டா படத்தை தொடர்ந்து, மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 | 

அர்ஜுன் ரெட்டி படத்தில் தனது தனித்துவமான ஆக்டிங்கால், கோடிக்கணக்கான இளம் ரசிகர்களை கவர்ந்தார் விஜய் தேவரக்கொண்டா. அதன் பின் தெலுங்கில் அவர் நடித்த 'கீதா கோவிந்தம்' படமும் சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிய நோட்டா திரைப்படத்தில் தேவரக்கொண்டா நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக ஓடவில்லை. அதன் பின் அவர் நடித்த டாக்சிவாலா படமும், பாக்ஸ் ஆபீசில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. 

இந்நிலையில், அடுத்ததாக ஒரு தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் நடிக்க தேவரக்கொண்டா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஸ்ரீகார்திக் என்ற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யோகி பாபு ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP