அமலா பாலை திருமணம் செய்கிறாரா விஷ்ணு விஷால்?

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'ராட்சசன்' படத்தில் நடித்திருந்த நடிகர் விஷ்ணு விஷாலுக்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 | 

அமலா பாலை திருமணம் செய்கிறாரா விஷ்ணு விஷால்?

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'ராட்சசன்' படத்தில் நடித்திருந்த நடிகர் விஷ்ணு விஷாலுக்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய், நடிகை அமலாபால் இருவரும் காதல் திருமணம் செய்தனர். அதன் பின்னர், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால், கடந்த 2011ம் ஆண்டு தனது கல்லூரி ஸ்நேகிதியான ரஜினியை திருமணம் செய்தார். இருவருக்கும் ஒரு மகன் உண்டு. சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்தனர். இந்நிலையில் ராட்சசன் படத்தில் நடித்தபோது, விஷ்ணுவுக்கும் அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்த, விஷ்ணு விஷால் உடனடியாக மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில் அவர், "இது என்ன முட்டாள் தனமாக உள்ளது. தயவு செய்து இது போல பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள். நாங்களும் மனிதர்கள் தான். எங்களுக்கு குடும்பங்கள் உள்ளன. எழுத முடியும் என்பதற்காக எது வேண்டுமானால் எழுதலாம் என நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள்" என காட்டமாக மறுத்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP