வைரலாகும் அஜய் தேவ்கன் மகனின் ஃபிட்னெஸ் வீடியோ!

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இந்தியர்கள் தங்கள் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தாங்கள் செய்யும் உடற் பயிற்சியை வீடியோவாக வெளியிடும் படி வலியுறுத்தினார்.
 | 

வைரலாகும் அஜய் தேவ்கன் மகனின் ஃபிட்னெஸ் வீடியோ!

வைரலாகும் அஜய் தேவ்கன் மகனின் ஃபிட்னெஸ் வீடியோ!

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங்  ரத்தோர் இந்தியர்கள் தங்கள் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தாங்கள் செய்யும் உடற் பயிற்சியை வீடியோவாக வெளியிடும் படி வலியுறுத்தினார். அதோடு தான் செய்யும் உடற் பயிற்சியையும் ட்விட்டரில் வெளியிட்டு இந்த சேலஞ்சை முன்னெடுக்கும் படி விராட் கோலி, சாய்னா நெஹ்வால், ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோருக்கு பரிந்துரை செய்தார். 

இதனை ஏற்றுக் கொண்ட கோலி, சமீபத்தில் தான் உடற் பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டார். கூடவே பிரதமர் மோடி, கேப்டன் கூல் தோனி, தனது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோருக்கும் இந்த ஃபிட்னெஸ் சேலஞ்சை பரிந்துரைத்தார். 

இந்த மாதிரி ஒவ்வொரு பிரபலமும் சாவாலை ஏற்றுக் கொண்டும், மற்றவருக்கு பரிந்துரைத்தும் வருகிறார்கள். 

இந்த லிஸ்டில் புதிதாக இணைந்திருப்பவர் அஜய் தேவ்கன் கஜோல் தம்பதியின் மகன் யோக். ஏழு வயதான யோக் சிறுவர்களும் தங்களின் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் அஜய் தேவ்கன். இந்த வீடியோ பலரின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டுள்ளது. அதோடு இணையத்தில் படு ஸ்பீடாக வைரலும் ஆகியிருக்கிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP