பிரபல பின்னணி பாடகி தீடீர் தற்கொலை! அதிர்ச்சியில் திரையுலகினர்!! 

நாகரிகம் எத்தனை தான் முன்னேறினாலும், நூற்றாண்டுகளில் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கிறோம் என்று பெருமை பேசி வந்தாலும், பெண்களைக் கொடுமைப்படுத்தும் போக்கு மட்டும் இன்று வரையிலும் சமூகத்தில் மாறவேயில்லை. அதிலும் திரையுலகைச் சேர்ந்த பெண்கள், குடும்ப வாழ்க்கையில் படும் அவலங்களைக் களைவதற்கு எந்த மொழித்
 | 

பிரபல பின்னணி பாடகி தீடீர் தற்கொலை! அதிர்ச்சியில் திரையுலகினர்!! 

நாகரிகம் எத்தனை தான் முன்னேறினாலும், நூற்றாண்டுகளில் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கிறோம் என்று பெருமை பேசி வந்தாலும், பெண்களைக் கொடுமைப்படுத்தும் போக்கு மட்டும் இன்று வரையிலும் சமூகத்தில் மாறவேயில்லை. அதிலும் திரையுலகைச் சேர்ந்த பெண்கள், குடும்ப வாழ்க்கையில் படும் அவலங்களைக் களைவதற்கு எந்த மொழித் திரைப்பட சங்கங்களாக இருந்தாலும் அக்கறைக் கொள்வதில்லை.

இந்நிலையில், பிரபல கன்னட பின்னணி பாடகி சுஷ்மிதா (27), திடீரென அவரது வீட்டில் நேற்று தற்கொலைச் செய்துக் கொண்டது திரையுலகில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பின்னணி பாடகி தீடீர் தற்கொலை! அதிர்ச்சியில் திரையுலகினர்!! 

கன்னட திரையுலகில் பிரபல பாடகியாக வலம் வந்த சுஷ்மிதா, புகழின் உச்சியில் இருந்த போதே கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சரத் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவரின் குடும்பத்தினர், சுஷ்மிதாவிடம் தொடர்ந்து அதிகளவில் வரதட்சணைக் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. அதன் பின்னர், கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டிற்கு வந்திருந்த சுஷ்மிதா அதிகளவில் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்ட பாடகி சுஷ்மிதா, தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது சகோதரர்  சச்சினுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியுள்ளார். 

 

அதில், எனது மரணத்திற்கு என்னுடைய கணவர் சரத், வைதேகி மற்றும் கீதா ஆகியோர் தான் நேரடியாக காரணம். நான் அவர்களின் கால்களை பிடித்து எவ்வளவு தான்  கெஞ்சினாலும், பிச்சை எடுத்தாலும், அவர்களுடைய வன்முறையும், சித்ரவதையும் நாளுக்கு நாள் குறையவே இல்லை. நான் தற்கொலை செய்துக் கொள்வது உங்களுக்கு வருத்தமாக இருக்கலாம். என்னை மன்னித்து விடுங்கள் அம்மா. மாமியார் கூறுவதை கேட்டுக் கொண்டு என் கணவர் என்னை தினமும் சித்ரவதை செய்துக் கொண்டிருந்தார்.

தினந்தோறும் என்னைத் தொடர்ந்து, வீட்டை விட்டு வெளியே போய்விடுமாறு தொந்தரவு செய்தனர். எனக்கு தினந்தோறும் தொடர்ந்து நடந்த வன்முறைகளைப் பற்றி நான் யாரிடமும் கூறியது இல்லை. எனது மரணத்திற்கு காரணமான யாரையும் விட்டு விடாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியருக்கும் நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த பாடகி சுஷ்மிதா, தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி யாரிடமாவது கூறியிருந்தால் நிச்சயம் அவரது உயிரை காப்பாற்றியிருக்கலாம் என்று அவரது தோழிகள் அழுதது பார்ப்பவர்களின் மனதைக் கலங்கச் செய்தது.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP