பிரபல இசையமைப்பாளர் நாகேஷ்வர்ராவ் காலமானார்

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்தவர் நாகேஷ்வர்ராவ் என்கிற ஆதீஷ். . இவர் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் வாக்குமூலம், தேள்,மௌனமழை உட்பட படங்களுக்கு இசையமைத்துள்ளார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
 | 

பிரபல இசையமைப்பாளர் நாகேஷ்வர்ராவ் காலமானார்

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்தவர் நாகேஷ்வர்ராவ் என்கிற ஆதீஷ். . இவர் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் வாக்குமூலம், தேள்,மௌனமழை உட்பட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் தமிழ்,தெலுங்கு, கன்னடம்,மலையாளம் போன்ற மொழிகளில் இசையமைத்துள்ளார்.  

இந்நிலையில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். திரையுலக பிரபலங்கள் பலரும் இவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடலுக்கு தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தலைவர் தீனா,  இசையமைப்பாளர் கண்மணிராஜா,இயக்குநர் திருஆனந்த், மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.இவருக்கு தேவிகா என்ற மனைவியும் துர்கா, ஆர்த்தி என இரு மகள்களும் உள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP