மேடையிலேயே கதறி அழுத பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!

தினமும் இரவு கதறி அழுவேன்.. நான் என்ன தவறு செய்தேன் என கேட்டு விழா மேடையிலேயே அழுத பிரபல நடிகை.. கண்கலங்கிய பிரபலங்கள்
 | 

மேடையிலேயே கதறி அழுத பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!

தினமும் இரவு கதறி அழுவேன்.. நான் என்ன தவறு செய்தேன் என கேட்டு விழா மேடையிலேயே அழுத பிரபல நடிகை.. கண்கலங்கிய பிரபலங்கள்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள படம் அவனே ஸ்ரீமன்நாராயணா. தமிழில் இப்படம் ஜனவரி 3ம் தேதி வெளியாகிறது. புதுமுக இயக்குனர் சச்சின் இயக்கியுள்ள இந்த படத்தில் மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ரக்ஷித் ஷெட்டி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லவ்லி, அட்டா, ரவுடி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்த ஷான்வி ஸ்ரீவத்சவா நடித்துள்ளார்.

மேடையிலேயே கதறி அழுத பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!

இந்நிலையில்," அவனே ஸ்ரீமன்நாராயணா" படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. விழாவில் பேசிய நடிகை ஷான்வி, "நான் பார்ப்பதற்கு அழகாக இல்லாமல் இருக்கலாம். நான் சரியாக நடிக்காமல் இருக்கலாம். அதற்காக எனக்கு ஆதரவு அளிக்காமல் இருக்காதீர்கள். ஊடக நண்பர்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ராம் கோபால் வர்மாவின் ரவுடி படத்தில் நடித்தப்பிறகு தெலுங்கில் எனக்கு படங்களே அமையவில்லை.

சுமார் ஒன்றரை ஆண்டுகள் நான் வேலையே இல்லாமல் தவித்தேன். அதை நினைத்து தினமும் இரவு கதறி அழுவேன். நான் என்ன தவறு செய்தேன் என எனக்கு தெரியவில்லை. என்னை நான் நிரூப்பிக்க அவனே ஸ்ரீமன்நாராயணா படம் மூலம் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது", எனக் கூறியவர் மேடையிலேயே மனமுடைந்து அழுதார். அதைப்பார்த்த அனைவரும் கண்கலங்கினர். பின்னர் பலத்த கரகோஷங்கள் எழுப்பி ஷான்வியை ஆற்றுப்படுத்தினர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP