பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படும் போட்டியாளர் யார் தெரியுமா?

மது மிதாவிடம் வனிதா நடந்துகொண்ட விதம் மற்றும் தன்னை காப்பாற்றி கொள்ள வனிதா செய்த வேலைகள் இவற்றை மையமாக கொண்டு இந்த வார எலிமினேஷன் செய்யப்படும் நபராக வனிதா இருப்பார் என தெரிகிறது.
 | 

பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படும் போட்டியாளர் யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் துவங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனின் முதல் போட்டியாளராக  வீட்டிற்குள் வந்த பாத்திமா பாபுதான் முதலில் எலிமினேஷன் செய்யப்பட்டார். அதோடு சென்ற மதுமிதா மக்களின் பெருவாரியான ஆதரவை  பெற்றிருந்தார். 

இதனை தொடர்ந்து, இரண்டாவது எலிமினேஷனுக்காக மதுமிதா, மீராமீதுன், சரவணன், மோகன் வைத்யா, வனிதா என 5 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களில் வனிதாவை தான் பெரும்பாலான போட்டியாளர்கள் நாமினேஷன் செய்திருந்தனர். அதோடு பிக்  பாஸ் வீட்டிற்குள் ஏற்படும் எந்த பிரச்னையாக இருந்தாலும் அதற்கு முக்கிய காரணம் அல்லது சண்டை பெரிதாவதற்கு காரணமாக இருக்கும்  நபர் வனிதா. 

எப்போதும் குரலை உயர்த்தி பேசுவது, பிறரை பற்றி குறை கூறுவது என இந்த சீசனை சண்டையும் சர்ச்சையுமாக நகர்த்தியதில் முக்கிய  பங்கு இவருக்குத்தான்.  மது மிதாவிடம் வனிதா நடந்துகொண்ட விதம் மற்றும் தன்னை காப்பாற்றி கொள்ள வனிதா செய்த வேலைகள் இவற்றை மையமாக கொண்டு இந்த வார எலிமினேஷன் செய்யப்படும் நபராக வனிதா இருப்பார் என தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP