பிக்பாஸ் போட்டியாளர் சாக்ஷி அகர்வால் பற்றி உங்களுக்கு தெரியுமா?

பிக்பாஸ் போட்டியாளர் சாக்ஷி அகர்வால் பற்றி உங்களுக்கு தெரியுமா?
 | 

பிக்பாஸ் போட்டியாளர் சாக்ஷி அகர்வால் பற்றி உங்களுக்கு தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்கும் முக்கிய போட்டியாளர்களில் ஒருவர் சாக்ஷி அகர்வால். ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், கன்னடம், மலையாள மாெழிப் படங்களிலும் நடித்து வருகிறார். 

வெறும் பேஷன் கலைஞராகவும், நடிகையுமாகவே அறியப்படும் இந்த சாக்ஷிக்கு இன்னொரு முகமும் உண்டு. அவர் ஒரு படிப்பாளி. முதல் பெஞ்ச் மாணவி. உத்தரகண்ட் மாநிலத்தில் பிறந்த இவர், வளர்ந்தது எல்லாம் நம்ம சென்னையில் தான். 

அண்ணா பல்கலையில் பிடெக் படித்த இவர், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து கோல்ட் மெடல் வாங்கியவர். அதை தொடர்ந்து, பெங்களூரில் எம்.பி.ஏ., படித்து அதிலும் முதலிடம் பிடித்தார். பின் கலை மீதான ஆர்வத்தால், அந்த துறை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டுள்ளார். 

தற்போது, பிக்பாஸ் 3ல் முக்கிய போட்டியாளராக கருதப்படும் இவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP