இயக்குநர் அவதாரம் எடுத்த கங்கனா ரனாவத்!

ஜான்சிராணியின் வாழ்க்கை வரலாற்றை மையப் படுத்திய சரித்திர படத்தையையக்கி வருகிறார் இயக்குநர் கிரிஷ். ‘மணிகர்ணிகா’ என அந்தப் படத்திற்குப் பெயரிடப் பட்டுள்ளது. இதில் கங்கனா ரனாவத் ஜான்சிராணியாக நடித்து வருகிறார்.
 | 

இயக்குநர் அவதாரம் எடுத்த கங்கனா ரனாவத்!

ஜான்சிராணியின் வாழ்க்கை வரலாற்றை மையப் படுத்திய சரித்திர படத்தையையக்கி வருகிறார் இயக்குநர் கிரிஷ். ‘மணிகர்ணிகா’ என அந்தப் படத்திற்குப் பெயரிடப் பட்டுள்ளது. இதில் கங்கனா ரனாவத் ஜான்சிராணியாக நடித்து வருகிறார். தமிழில் சிம்பு, அனுஷ்கா நடித்த வானம் படத்தை இயக்கியவர் தான் கிரிஷ். ஜான்சிராணி படப்பிடிப்பை வேகமாக முடித்துவிட்டு அடுத்து தான் இயக்கும் என்.டி.ராமராவ் வாழ்க்கை படத்தின் பணிகளில் இறங்கி விட்டார். 
 
இந்நிலையில் ‘மணிகர்ணிகா’ படத்தில் சில காட்சிகள் தனக்கு திருப்திகரமாக இல்லை, அதனால் சம்பந்தப்பட்ட காட்சிகளை ரீஷூட் செய்ய வேண்டும் என இயக்குனரிடம் கேட்டிருக்கிறார் கங்கனா. என்.டி.ராமராவ் வாழ்க்கை பற்றி படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் உடனடியாக இதில் கவனம் முடியவில்லையாம். அதனால் குறிப்பிட்ட காட்சிகளை தானே நடித்து இயக்கியிருக்கிறார் கங்கனா. உடனே சமூக வலைதளங்களில் கங்கனாவுக்கும் இயக்குநருக்கும் ஏதோ பிரச்னை என கொளுத்திப் போட, இயக்குநர் வேறொரு படத்தில் பிஸியாக இருந்ததால், அவர் சார்பாகத்தான் இந்த பொறுப்பை கங்கனா எட்டுத்துக் கொண்டார் என விளக்கியிருக்கிறார்கள், அவரது குழுவினர். 

www.newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP