ட்ரம்ப் செயலுக்கு கண்டனமா? சர்ச்சையை கிளப்பும் ஏ.ஆர். ரஹ்மான்!!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்கும் விதமாக, மகாத்மா காந்தியின் மண்ணியிலிருந்து உங்களை வரவேற்கிறோம் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வீடியோவுடன் கூடிய ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.
 | 

ட்ரம்ப் செயலுக்கு கண்டனமா? சர்ச்சையை கிளப்பும் ஏ.ஆர். ரஹ்மான்!!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்கும் விதமாக, மகாத்மா காந்தியின் மண்ணியிலிருந்து உங்களை வரவேற்கிறோம் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வீடியோவுடன் கூடிய ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவி மிலானியா ட்ரம்ப், மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் அவருடைய கணவருடன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.நேற்று முற்பகல் 11.45 மணியளவில் தனி விமானம் மூலம் குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் வரவேற்றார் பிரதமர் நரேந்திர மோடி. அம்மாநில பண்பாடு சார்ந்த நிகழ்வுகளுடன் ட்ரம்பின் இந்திய பயணம் கோலாகலமாக தொடங்கியது.

                                             ட்ரம்ப் செயலுக்கு கண்டனமா? சர்ச்சையை கிளப்பும் ஏ.ஆர். ரஹ்மான்!!

டொனால்டு ட்ரம்பின் இந்திய வருகையையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டுத் துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் ஆகியோர் அவரை வரவேற்பு சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டனர்.ஆனால் இவற்றில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டுள்ள கருத்து இணையதள வாசிகளிடம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது பதிவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை காந்திய மண் அன்போடு வரவேற்கிறது என தெரிவித்திருந்தார்.

அஹமதாபாத் வந்திறங்கிய டொனால்டு ட்ரம்ப், அங்கியிருந்து மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு மனைவியுடன் சென்றார். அங்கு அவர்களை வரவேற்ற மோடி, அவர்கள் இருவருக்கும் ஆசிரமத்தை சுற்றி காண்பித்தார்.பிறகு மோடியும் ட்ரம்பும் இணைந்து மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தனர். அசிரமத்தில் காந்தி பயன்படுத்திய நூல் நூற்கும் ராட்டையை ஆர்வமுடன் பார்த்தார் டிரம்ப். பிறகு அதனுடைய செயல்பாடுகளை அசிரம ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

                                              ட்ரம்ப் செயலுக்கு கண்டனமா? சர்ச்சையை கிளப்பும் ஏ.ஆர். ரஹ்மான்!!

ஆசிரமத்தை விட்டு கிளம்புகையில் பார்வையாளர்கள் குறிப்பேட்டில், இந்த அற்புதமான பயணத்திற்காக எனது சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி என்று தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி கையொப்பம் போட்டார்.

காந்தியின் ஆசிரமத்திற்கு வந்த ட்ரம்ப், காந்தி குறித்து ஒரு வார்த்தை கூட எழுதாமல் மோடியை புகழ்ந்து எழுதியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த பிரச்னையை பெரிதாக்கும் விதமாக  ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டர் பதிவை நெட்டிசன்கள் டிரென்ட் செய்து வருகின்றனர்.

அந்த பதிவை ஏதேச்சையாக ஏ.ஆர். ரஹ்மான் எழுதினாரா? அல்லது ட்ரம்ப் மீதான தனது விமர்சனத்தை முன்வைக்கிறாரா? என்பது குறித்து எதுவும் தெரியாத நிலையில், மக்களிடமும் ஊடங்களிடமும் அவருடைய பதிவு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

அந்த ட்வீட்டுடன் சேர்த்து ஏ.ஆர். ரஹ்மான் ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அதுவும் சாதாரண காணொலி இல்லை. அந்த வீடியோவில் ”செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும்” என்கிற திருக்குறள் தோன்றி மறைகிறது.

 

நமக்கு தீமை செய்த ஒருவருக்கு நாம் தீமையை செய்தால் அது அளவு கடந்த துன்பத்தை தரும் என்பதே இந்த திருக்குறளின் விளக்கம். இதன்முலம் சபர்மதி ஆசிரமத்தின் பார்வையாளர் குறிப்பேட்டில் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கருத்து பதிவிட்டத்தற்கு ஏ.ஆர். ரஹ்மான் கண்டனங்களை தெரிவிப்பதாக கூறுகின்றனர் ஒரு தரப்பினர். ஆனால் மற்றவரோ காந்தியின் ’அஹிம்சா’ கொள்கைக்கு ஏ.ஆர். ரஹ்மான் திருக்குறளில் உள்ள கருத்தை மேற்கொள் காட்டியுள்ளார் என்கின்றனர் மற்றொரு தரப்பினர்.


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP