தனுஸ்ரீயிடம் அத்துமீறினேனா?- சிரித்தபடி மறுக்கும் படேகர்; வாய் திறந்த பாலிவுட் வட்டாரம்

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனுஶ்ரீ தத்தா, குற்றச்சாட்டு வைத்தார். அதனை மறுத்திருக்கும் படேகர், இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 | 

தனுஸ்ரீயிடம் அத்துமீறினேனா?- சிரித்தபடி மறுக்கும் படேகர்; வாய் திறந்த பாலிவுட் வட்டாரம்

'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் அறிமுகமான தனுஶ்ரீ தத்தா, பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு வைத்தார். அதனை மறுத்திருக்கும் நானா படேகர், இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். 

10 ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட் நடிகர் நானா படேகர் ஷூட்டிங் ஸ்பாட்டில் அத்துமீறி நடந்ததாகவும் இதனால் அங்கு பிரச்னை ஏற்பட்டதை அங்கிருந்து 50க்கும் அதிகமானோர் கண்டனர். ஆனால் அப்போது தான் துறைக்கு புதியவர் என்பதால் நியாயம் கிடைக்கவில்லை. அந்த சமயம் சுனில் ஷெட்டியும் இர்ஃபான் காணும் எனக்காக பேசினர். இயக்குனரிடம் எனக்காக குரல் கொடுத்தனர் என்று தனுஸ்ரீ சில தினங்களுக்கு முன்பு வைத்த பகிரங்க குற்றச்சாட்டு தென் இந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தனுஸ்ரீ குற்றச்சாட்டு...

2005ல் இந்தியில் வெளியான படம் 'ஆஷிக் பனாயா அப்னே'. இதில் அறிமுகமானவர் தான் நடிகை தனுஸ்ரீ தத்தா. பின்னர் தமிழில் நடிகர் விஷாலுடன் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' போன்ற படங்களில் நடித்தார். இதனிடையே சமீபத்தில் தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த தனுஸ்ரீ, '' 2009ஆம் ஆண்டில் 'ஹார்ன் ஓ.கே. பிளீஸ்' என்ற இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். அந்த படத்தின் ஷூட்டிங்கின்போது அதில் நடித்த பிரபல நடிகர் நானா படேகர் எநிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்தார். ஒரு நடனக் காட்சி படமாக்கப்பட்டபோது அவருக்கு அவசியமே இல்லாத நிலையில் உள்ளே புகுந்தார். 

என்னிடம் தகாத இடங்களில் சீண்டித் தொல்லை கொடுத்தார். அப்போது நான் பிரச்னை செய்தேன். இது தொடர்பாக புகாரும் கூறினேன். அந்த சம்பவத்தை அனைவரும் பார்த்தும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யாருமே எதுவும் செய்யவிலலை. நான் அப்போது அறிமுக நடிகை என்பதால் அந்த நிலை. 

ஆனால் தற்போது சூழல் மாறியுள்ளது. நடிகைகள் தைரியமாக பேசத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் அப்போதே நான் தைரியமாக பேசியபோதிலும் எனக்கு பலன் கிடைக்கவில்லை. அவரது நடவடிக்கை குறித்து துறையில் அனைவருக்குமே தெரியும். அவர் நடிகைகளை அடிக்கவும் செய்வார். சிலரை மானபங்கமும் செய்துள்ளார். 

#MeToo இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது என்றாலும் பெரிய தாக்கம் இல்லை. ஹாலிவுட்டில் எடுக்கப்படுவது போன்ற நடவடிக்கைகள் இங்கு இல்லை என்பது தான் எனது கவலை.  நமது துறையில் பெண்கள் நடிப்பதற்கு சூழ்நிலையே இல்லை. 

இவர்களை போல பெண்களை இழிவாக நினைப்பவர்களுடன் தொடர்ந்து பெரிய நடிகர்கள் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அது அவர்களை மேலும் பெரியவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது. அக்ஷேய் குமார், தமிழ் நடிகர் ரஜினிகாந்த், ஆகியோர் நானா படேகருடன் நடித்துள்ளார். யாரும் நானா படேகரை புறக்கணிக்கவில்லை. இதுபோன்ற எண்ணம் கொண்ட நடிகர்களுடன் மூத்த நடிகர்கள் நடிக்கும்போது எத்தனை இயக்கம் இருந்தாலும் அவை பெயர் அளவில் தான். என்ன பயன் கிடைக்கும்?

திரையில் ஜொலிக்கும் நடிகர்கள், திரைக்குப் பின்னால் வேறுவிதமாக இருப்பார்கள். அழுக்காகவும் மோசமாகவும் இருக்கிறார்கள். இது போல வெளிவராத கதைகள் பலரிடமும் இருக்கின்றன'' என்று பகிரங்கமாக கூறினார். 

இதற்கு தொலைகாட்சி ஒன்றிற்கு பதிலளித்துள்ள நானா படேகர், சிரித்தபடியே, ''இப்போது அதற்காக நான் என்ன செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ''பாலியல் அத்துமீறல் என்று எதை தனுஸ்ரீ கூறுகிறார்? அப்போது என்னுடன் 50....100... பேர் அங்கிருந்தனர்... இது குறித்து சட்ட ரீதியாக என்ன செய்யலாம் என்று பார்க்கிறேன்'' என்று தொலைகாட்சி நிருபரிடம் கூறியுள்ளார். 

இந்த விவகாரம் குறித்து யாரும் இது வரை பேசிடாத நிலையில் பாலிவுட் வட்டாரம் கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ளது. ''இந்த விவகாரங்கள் குறித்து தற்போது விவாதங்கள் நடைபெறுகிறுது. தனுஸ்ரீ 10 வருடங்கள் அமைதியாக இருந்த போதிலும் அவர் கதை எதையும் மாற்றவில்லை. அவரது தைரியம் பாராட்டப்பட வேண்டும், அவளுடைய எண்ணம் கேள்வி கேட்கப்படவில்லை. இந்த துறையில் இருந்த மவுனத்தை உடைத்தற்கு நன்றி தனுஸ்ரீ தத்தா'' என பர்காத் தத் கூறி உள்ளார்.

''ஒத்துக்கொள்கிறேன்...இந்த உலகம் தப்பிப் பிழைத்தவர்களை நம்பி தான் ஆக வேண்டும்'' என்று பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டுள்ளார். தனுஸ்ரீ தத்தாவின் தங்கை இஷிதா தத்தா, தனது சகோதரிக்கு நடந்தவற்றை மறக்க முடியாது என தெரிவித்துள்ளார். டிவிங்கிள் கண்ணா குறிப்பிடுகையில், முதலில் தனுஸ்ரீ குறித்து அபத்தமாக பேசுவதை நிறுத்துங்கள். அவரை யாரும் முத்திரை குத்த முடியாது. சீண்டல்கள் இல்லாத துறை வேண்டும் என்பது ஒவ்வொருவரது உரிமை. அவரை நினைத்தால் பெருமையாக உள்ளது'' என்று கூறியுள்ளார். 

இதே போல  ஸ்வரா பாஸ்கர், ரிச்சா சந்தா, அனுராக் காஷ்யப் என பலரும் ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இ. து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில் பதில் கூறிய அமிதாப் பச்சன், நான் தனுஸ்ரீயும் இல்லை நானா படேகரும் இல்லை. எப்படி பதில் அளிக்க முடியும் என்று கூறியுள்ளார். அமிதாபை போல சல்மான் கான், ஆமீர் கான் ஆகியோரும் இந்த விஷயத்தில் வாய்த் திறக்காமல் நழுவியுள்ளனர்

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP