தனுஸ்ரீ தத்தா விவகாரம்: ஜகா வாங்கிய நானா!

முன்னாள் மிஸ் இந்தியாவும் பாலிவுட் நடிகையுமான தனுஸ்ரீ தத்தா, தன மீது சுமத்தியுள்ள பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நடிகர் நானா படேகர் அழைத்த பத்திரிகையாளர் சந்திப்பு வழக்கறிஞர்களின் அறிவுரையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 | 

2009ம் ஆண்டு, 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பின் போது, தன்னை பிரபல நடிகர் நானா படேகர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சமீபத்தில் குற்றம் சாட்டினார் தனுஸ்ரீ தத்தா. அப்போது தான் கூறிய குற்றச்சாட்டுகளை யாருமே ஏற்கவில்லை என கூறிய தனுஸ்ரீ, நானா படேகர் அரசியல் பலத்தை வைத்து மிரட்டியதாகவும் கூறினார். 

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நானா படேகர், தன்னிடம் தனுஸ்ரீ மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில், இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு நானா படேகர் அழைப்பு விடுத்திருந்தார். தனுஸ்ரீ தத்தா விவகாரம் குறித்து அவர் ஊடகங்களிடம் பேச இருந்த நிலையில், திடீரென ஒரு குறுஞ்செய்தி மூலம், பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவரது மகன் தெரிவித்தார். இன்று காலை அவரது வீட்டின் வெளியே கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசிய நானா, "எந்த ஊடகத்திடமும் பேச வேண்டாம் என எனது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அவர் பேச்சை நான் கேட்க வேண்டும். 10 வருடங்களுக்கு முன் சொன்னதை தான் சொல்லுவேன். உண்மை மாறப்போவதில்லை" என கூறினார். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP