தீபிகா-ரன்வீர் கல்யாண தேதி அறிவிக்கபட்டது

பாலிவுட் பிரபலங்கள் தீபிகா படுகோனேவுக்கும்ம், ரன்வீர் சிங்குக்கும் இத்தாலியில் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
 | 

தீபிகா-ரன்வீர் கல்யாண தேதி அறிவிக்கபட்டது

பாலிவுட் பிரபலங்கள் தீபிகா படுகோனேவுக்கும்ம், ரன்வீர் சிங்குக்கும் இத்தாலியில் வருகிற நவம்பர் 20ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

பாலிவுட் பிரபலங்கள் தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்கள். வெளிநாடுகளிலும் ஜோடியாக சுற்றி திரியும் இவர்கள் சமீபத்தில் தங்கள் காதலை அதிகார்வபூரமாக அறிவித்துள்ளனர்.

இருவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், திருமண தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நவம்பர் 20ம் தேதி இத்தாலியில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாகவும், இந்த திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமான சுமார் 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர்.

எளிமையான முறையில் திருமணத்தை நடத்திவிட்டு, இந்தியா திரும்பிய பிறகு நடிகர், நடிகைகளை அழைத்து மும்பையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த தீபிகா ரன்வீர் ஜோடி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP