முன்னாள் காதலர் படத்தை வெளியிட்டு விமர்சனத்துக்கு ஆளான நடிகை!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது காதலர் ரன்வீர் சிங்கை விரைவில் கரம் பிடிக்கப் போவதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இத்தாலியில் வரும் நவம்பர் மாதம் இவர்களது திருமணம் நடக்கும் என்ற செய்திகளும் வெளியாகின. இந்நிலையில், தற்போது தீபிகா செய்த ஒரு செயலால் அதிக விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு 'உலக புகைப்பட நாள்' கொண்டாடப் பட்டது.
 | 

முன்னாள் காதலர் படத்தை வெளியிட்டு விமர்சனத்துக்கு ஆளான நடிகை!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது காதலர் ரன்வீர் சிங்கை விரைவில் கரம் பிடிக்கப் போவதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இத்தாலியில் வரும் நவம்பர் மாதம் இவர்களது திருமணம் நடக்கும் என்ற செய்திகளும் வெளியாகின. 

இந்நிலையில், தற்போது தீபிகா செய்த ஒரு செயலால் அதிக விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு 'உலக புகைப்பட நாள்' கொண்டாடப் பட்டது. அப்போது பலரும் தங்களது மறக்க முடியாத படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதற்கு தீபிகாவும் விதிவிலக்கில்லை. 

தன்னுடன் 'தமாஷா' படத்தில் நடித்தவரும், தன்னுடைய முன்னாள் காதலருமான ரன்பீர் கபூரின் படத்தைப் பகிர்ந்து, 'தருணங்களை படம் பிடித்தல்' என்ற கேப்ஷனில் இன்ஸ்டாவில் வெளியிட்டு இருந்தார் தீபிகா. அதாவது தூரத்தில் ஒரு பாறை மீது அமர்ந்திருக்கும் ரன்பீரை, தீபிகா படம் பிடிப்பது போல் அந்தப் படம் இருந்தது. 

இதனைப் பார்த்த ரசிகர்கள் உடனடியாக தீபிகாவை விமர்சிக்கத் தொடங்கி விட்டனர். 
'ரன்வீரின் காதலுக்கு உகந்தவராக நீங்கள் இல்லை, 
இன்னும் ரன்பீருடனா?,
 முன்னாள் காதலரின் படமா?, 
உங்களால் அவரை மறக்க முடியவில்லையா?' போன்ற பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருக்கிறார்கள் ரசிகர்கள். 
மேலும் செய்திகளுக்கு - www.newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP