Logo

பூஜையுடன் தொடங்கிய 'தளபதி 64' : ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கும் ரசிகர்கள்!

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பிகில் திரைப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியை விஜய்யின் தளபதி 64 அளித்துள்ளது.
 | 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கவுள்ள படம் 'தளபதி 64'. திரில்லர் கதையைக் கொண்டு உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில், விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு மற்றும் நடிகை மாலவிகா மோகனன் ஆகியோர் நடிக்கவுள்ளதை படக்குழு ஏற்கனவே உறுதி செய்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை குறைந்த நாட்களில் படமாக்கி திரையிட படக்குழுவினர் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. இதனை கொண்டாடும் விஜய் ரசிகர்கள் #Thalapathy64Pooja என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP