பிரபல நடிகரின் 2ம் திருமணம்! புது காதலியும் பிரபல நடிகை தான்!

வெண்ணிலா கபடி குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இதை தொடர்ந்து குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 | 

இவருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கி நண்பரும், இயக்குநருமான நட்ராஜின் மகள் ரஜினி நட்ராஜ்க்கும் கடந்த 2011ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு இருவரும் பிரிந்தனர். 

பிரபல நடிகரின் 2ம் திருமணம்! புது காதலியும் பிரபல நடிகை தான்!

இந்நிலையில், விஷ்ணு விஷால், பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவைக் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஜூவாலா கட்டா, பிரபல பேட்மிண்டன் வீரர் சேத்தன் ஆனந்த்தை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்றவர். இதனிடையே விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளது. 

புத்தாண்டை முன்னிட்டு, ஜுவாலா கட்டா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், அவரை, விஷ்ணு விஷால் முத்தமிடுவது போன்ற புகைப்படத்துடன், 'ஹேப்பி 2020" எனப் பதிவிட்டுள்ளார். ஜுவாலா கட்டா டுவிட்டரில் வெளியிட்டுள்ள மற்றுமொரு புகைப்படத்தையும் விஷ்ணு விஷால் ரி-டுவீட் செய்துள்ளார். அதோடு, அவருடைய மகன் ஆர்யன் உடன் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். இதனால் விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா திருமணம் விரைவில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Happy 2020 ❤️

A post shared by Jwala Gutta (@jwalagutta1) on

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP