நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு புற்றுநோய் பாதிப்பு

பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்.
 | 

நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு புற்றுநோய் பாதிப்பு

பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்.

"அழகாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில், நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத நேரம் உங்கள் பாதையில் முட்களை போடுவதே வாழ்க்கையின் கோலம்" - இப்படி தனது செய்தியை ட்விட்டர் பக்கத்தில் ஆரம்பித்துள்ளார் நடிகை சோனாலி பிந்த்ரே. 

இவர் வாழ்க்கையில் என்ன தடங்கல் என்று யோசிக்கும்போது, தான் புற்றுநோயால் நோயால் பெரிதும் தாக்கப்பட்டிருப்பதாக எழுதி இருந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 

பாலிவுட்டில் நடிகர் இர்ஃபான் கானை தொடர்ந்து இவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
 
பாலிவுட் மட்டுமில்லாமல் தமிழிலும் தெலுங்கிலும் கூட நடிகை சோனாலி பிந்த்ரே பிரபலம். 'காதலர் தினம்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகி வெகுவாகக் கவர்ந்தவர் சோனாலி.

"தாங்கமுடியாத வலி என்னை சில சிகிச்சை எடுக்க செய்தது. ஆய்வில் புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி, சிகிச்சைக்காக நியூயார்க் செல்கிறேன். குடுமபத்தார் மற்றும் நண்பர்கள் எனக்கு உற்ற துணையாக இருக்கிறார்கள்" என்று தனது ட்வீட்டை முடித்திருந்தார் சோனாலி.  

"இந்தியாவின் சிறந்த ட்ராமேபாஸ்" என்ற ரியாலிட்டி ஷோவிலிருந்தும் பாதியிலேயே விலகினார் சோனாலி. சிகிச்சைக்குப் பின் நன்கு குணமடைந்து வந்து ரசிகர்களை மகிழ்விப்பார் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP