நடிகை ஸ்ருதியை திருமணம் செய்து வைக்கக்கோரி தொழிலதிபர் தற்கொலை மிரட்டல்!

திருமண மோசடி புகாரில் சிக்கியுள்ள நடிகை ஸ்ருதியை திருமணம் செய்துவைக்க வலியுறுத்தி, கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலதிபர் மற்றும் அவரது மகனை காவல்துறையினர் கைது செய்தனர். திருமண மோசடி புகாரில் சிக்கியுள்ள நடிகை ஸ்ருதி வெளிநாட்டில் படித்துவருகிறார்.
 | 

நடிகை ஸ்ருதியை திருமணம் செய்து வைக்கக்கோரி தொழிலதிபர் தற்கொலை மிரட்டல்!

திருமண மோசடி புகாரில் சிக்கியுள்ள நடிகை ஸ்ருதியை திருமணம் செய்துவைக்க வலியுறுத்தி, கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலதிபர் மற்றும் அவரது மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.


திருமண மோசடி புகாரில் சிக்கியுள்ள  நடிகை ஸ்ருதி வெளிநாட்டில் படித்துவருகிறார். அவரது தாய் சித்ரா சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் தொழிலதிபர் ராஜசேகரனின் மகன் அமுதன் வெங்கடேசன் ஸ்ருதியை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென ஸ்ருதியிடமும், அவரது தாயிடமும் அமுதன் கேட்டார். ஆனால் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 

நடிகை ஸ்ருதியை திருமணம் செய்து வைக்கக்கோரி தொழிலதிபர் தற்கொலை மிரட்டல்!
தற்போது ஸ்ருதி வெளிநாடு சென்றுவிட்டதால், அவரது தாயிடம் திருமணம் செய்து வைக்க வேண்டுமென வலியுறுத்தினர். இல்லாவிட்டால் ஆசிட் வீசிவிடுவோம் என மிரட்டியதாக தெரிகிறது. இதுதொடர்பாக ஸ்ருதியின் தாய் சித்ரா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.


இந்நிலையில் நடிகர் ஸ்ருதியை திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி கழுத்தில் கத்தியை வைத்து ராஜசேகரும், அவரது ம மகனும் தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பான புகாரில் இருவரையும் காவல்துறையின் கைது செய்துள்ளனர். நடிகை ஸ்ருதி ஏற்கனவே திருமண மோசடியில் சிக்கியுள்ளதால், காவல்துறையினர் இவ்வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP