பாக்ஸ் ஆபிஸ் நாயகிகள் வரிசையில் சோபிப்பாரா சோனம்?

இந்த ஆண்டு பாலிவுட்டில் எப்போதும் இல்லாமல் முதன்மைக் கதாபாத்திரங்களில் நாயகிகளின் ஆதிக்கமே கொடி கட்டிப் பறக்கிறது.
 | 

பாக்ஸ் ஆபிஸ் நாயகிகள் வரிசையில் சோபிப்பாரா சோனம்?

இந்த ஆண்டு பாலிவுட்டில் எப்போதும் இல்லாமல் முதன்மைக் கதாபாத்திரங்களில் நாயகிகளின் ஆதிக்கமே கொடி கட்டிப் பறக்கிறது. 
பெண்கள் பற்றிய பல பிற்போக்குச் சிந்தனைகளைத் தகர்த்தெறிந்து பெண்களின் சக்தியை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு வெளிவந்த படம் ராணி முகர்ஜி நடித்த 'ஹிட்ச்கி'. நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் தோன்றிய ராணி முகர்ஜி தன் அசாத்திய நடிப்பால் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் என்றே சொல்ல வேண்டும்.

இதனைத் தொடர்ந்து திரையிலும் சரி, திரைக்கு வெளியிலும் சரி பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் ராணி ஆலியா பட். அவர்  நடித்த 'ராஸ்ஸி' திரைப்படம் கடந்த 3 வாரங்களாக வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்க, ரன்பிர் கபூரும் ஆலியா மீது தனக்குள்ள காதலை உறுதிசெய்து அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்திய உளவாளியாக பாகிஸ்தான் நாட்டிற்கு மருமகளாக செல்லும் ஆலியா பட் இந்தப் படத்தில் தன் நடிப்பால் ரூ.100 கோடி பாக்ஸ்-ஆபீஸ் ஹிட் கொடுக்கும் நடிகையர் பட்டியலில் சேர்ந்துள்ளார்.

நடிகைகளின் பட்டாளத்தைக் கொண்டு ஜூன் மாதம் திரைக்கு வந்துள்ள படம் 'வீரே தி வெட்டிங்'. இந்தப் படமும் பாக்ஸ் ஆபீஸை கலக்கும் என்பதுதான் இப்போது பாலிவுட்டின் எதிர்பார்ப்பு. இந்தப் படத்திற்கு மக்களிடையே கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று சோனம் கபூர் கூறியுள்ளார். 

இந்தப் படம் சமகால திருமணங்கள் மற்றும் அதிலுள்ள சிக்கல்களை அலசி ஆராயும் கதையம்சத்தை கொண்டதாக ப்ரோமோக்கள் சித்தரிக்கன்றன. எனவே, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 

'வீரே தி வெட்டிங்' ராயல் வெட்டிங்-கை போல் பல நாட்கள் பேசப்படுகிறதா? இல்லையா? என்பதை நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP